For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

500வது வெற்றி! ஆஸி.வை வீழ்த்தி ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் முத்திரை பதித்த இந்தியா!!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் புதிய முத்திரை பதித்துள்ளது. நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் போட்டிகளில் தன் 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.

உலகில் இந்தியா தவிர்த்து ஒரே ஒரு நாடு மட்டுமே இந்த சாதனையை எட்டியுள்ளது. இந்த புதிய சாதனை பற்றிய குறிப்புக்களை பார்க்கலாம்.

ஆஸி.வை வீழ்த்தி வெற்றி

ஆஸி.வை வீழ்த்தி வெற்றி

இதற்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட வெற்றிகளை பெற்ற ஒரே அணி ஆஸ்திரேலியா மட்டுமே. தற்போது இந்தியா ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகளை பெற்றுள்ளது. அதுவும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா இந்த சாதனையை எட்டியுள்ளது.

நாக்பூர் போட்டி

நாக்பூர் போட்டி

நாக்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் நாக்பூர் போட்டி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. முன்னதாக ஹைதரபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

இந்தியாவின் வெற்றிகள்

இந்தியாவின் வெற்றிகள்

இந்தியா இதுவரை 963 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அதில் 500 வெற்றிகள், 414 தோல்விகள், 9 டை'கள், 40 கைவிடப்பட்ட போட்டிகள் ஆகும். 500 வெற்றிகளோடு இந்தியாவின் வெற்றி சதவீதம் 54.70 ஆகும்.

ஆஸ்திரேலியாவின் வெற்றிகள்

ஆஸ்திரேலியாவின் வெற்றிகள்

ஆஸ்திரேலிய அணி 924 போட்டிகளில் 558 வெற்றி, 322 தோல்வி சந்தித்துள்ளது. மீதமுள்ள போட்டிகளில் டை'கள் 9 மற்றும் முடிவு தெரியாத போட்டிகள் 34 ஆகும். இந்த அணியின் வெற்றி சதவீதம் 63 ஆகும்.

பின்னே வரும் பாகிஸ்தான்

பின்னே வரும் பாகிஸ்தான்

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அந்த அணி 907 ஒருநாள் போட்டிகளில் ஆடி 479 வெற்றிகளுடன் உள்ளது. கிரிக்கெட்டை தோற்றுவித்த நாடான இங்கிலாந்து 726 போட்டிகளில் ஆடி 362 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றி சதவீத பட்டியல்

வெற்றி சதவீத பட்டியல்

இந்த பட்டியலில் வெற்றி சதவீத அடிப்படையில் பார்த்தால் தென்னாபிரிக்கா அணி 63.89 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணி 606 போட்டிகளில் 374 வெற்றிகள் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா, மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளன.

கோலி காலத்தில் சாதனை

கோலி காலத்தில் சாதனை

கோலி கேப்டனாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள நிலையில், இந்த மைல்கல் சாதனையையும் அவர் தலைமையேற்ற காலத்தில் நடந்துள்ளது. இந்த 500 வெற்றிகளில் பல நூறு இந்திய வீரர்களுக்கும் பங்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

Story first published: Tuesday, March 5, 2019, 22:42 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
India vs Australia 2nd ODI victory is the 500Th ODI win for India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+