பேட்டிங்கில் நல்ல பெயர் எடுத்தாலும் ரெண்டு தடவையும் இப்படி ஆகிப் போச்சே விஜய் ஷங்கர்!!
v
Recommended Video

நாக்பூர் : விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றார் விஜய் ஷங்கர். அந்த வாய்ப்பை பயன்படுத்திய அவர் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நான்கு ரன்களில் தவற விட்டார்.

ஐந்தாம் இடத்தில் விஜய் ஷங்கர்
இந்திய அணி 17 ஓவர்களில் 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது சற்று முன்னேறி ஐந்தாம் இடத்தில் களமிறங்கிய விஜய் ஷங்கர், கேப்டன் கோலியுடன் இணை சேர்ந்தார்.

பொறுப்பாக ஆடினர்
கோலி - விஜய் ஷங்கர் இருவரும் பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தனர். அதிலும் விஜய் தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்களை எடுத்து வந்தார். அதனால், நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து வந்தார்.

ரன் அவுட் ஆனார்
இடையே 5 ஃபோர், 1 சிக்ஸ் என பவுண்டரிகளும் அடித்த விஜய், 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து தான் திறமையான பேட்ஸ்மேன் என நிரூபித்தார். இன்னும் நான்கு ரன்கள் எடுத்தால் முதல் ஒருநாள் போட்டி அரைசதம் எடுக்கலாம் என்ற நிலையில் ரன் அவுட் ஆனார் விஜய்.

இரண்டு முறை 40
இதுவரை இரண்டு முறை மட்டுமே ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெற்றுள்ள விஜய் ஷங்கர் இரண்டு போட்டிகளிலும் 45, 46 என நாற்பது + ரன்களை எடுத்தார். மேலும், இரண்டு போட்டிகளிலுமே ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்ல பெயர்
இரண்டு முறை அரைசதம் அடிக்கும் வாய்ப்பை 4, 5 ரன்களில் கோட்டை விட்டாலும், பொறுப்பான பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்றுள்ளார் விஜய் ஷங்கர். இதன் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்கும் பந்தயத்தில் வேகமாக முன்னேறி வருகிறார்.


Click it and Unblock the Notifications