For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus 2nd T20: இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த மாக்ஸ்வெல்.. இமாலய இலக்கை சேஸ் செய்த ஆஸி.

பெங்களூரு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இழந்துள்ளது. இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனினும், பந்துவீச்சு கைவிட்டதால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்திய அணியில் மாற்றம்

இந்திய அணியில் மாற்றம்

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. முதல் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா, மாயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, ஷிகர் தவான், விஜய் ஷங்கர், சித்தார்த் கௌல் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ஷிகர் தவான், ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், தோனி, விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா, சாஹல், பும்ரா, சித்தார்த் கௌல்.

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி - ஷார்ட், ஸ்டாய்னிஸ், ஆரோன் பின்ச், மாக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கோம்ப், டர்னர், கோல்டர் நைல், பாட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், பெஹ்ரண்டாப், சாம்பா

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா அணிக்கு துவக்க வீரர்களாக தவான், ராகுல் களம் இறங்கினர். ராகுல் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். தவான் 24 பந்துகளில் 14 ரன்கள் அடித்து வெளியேறினார். ரிஷப் பண்ட் தேவையற்ற ஷாட் ஆடி 1 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தோனி 40 ரன்களில் வெளியேறினார். கோலி அதிரடியாக ஆடி 72 ரன்கள் குவித்தார். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்தது.

ஆஸி. சேஸிங்

ஆஸி. சேஸிங்

ஆஸி. அணிக்கு 191 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது. துவக்க வீரர் ஸ்டாய்னிஸ் 7, ஆரோன் பின்ச் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஷார்ட் 40 ரன்களில் வெளியேறினார். மாக்ஸ்வெல் அதிரடியாக ஆடி சதம் அடித்து, 113 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். அவருக்கு ஹேண்ட்ஸ்கோம்ப் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். ஆஸி. அணி 19.4 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என கைப்பற்றி அசத்தியது.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம், பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது தான். இந்திய அணி மீண்டும் ஒரு முறை கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாமல் களம் இறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களின் ஓவர் ரன் சராசரி - சித்தார்த் கௌல் 12.27, சாஹல் 11.75, விஜய் ஷங்கர் 9.50, க்ருனால் பண்டியா 8.50, பும்ரா 7.50. பண்டியா, பும்ரா தவிர மற்ற மூவரும் அளவுக்கு அதிகமாக ரன்களை வாரி இறைத்தனர்.

Story first published: Wednesday, February 27, 2019, 22:44 [IST]
Other articles published on Feb 27, 2019
English summary
India vs Australia 2nd T20 Live score update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+