Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸிக்கு எதிரான 2வது டி20 - இந்தியாவின் பிளேயிங் XI மாற்றம் நிகழுமா? தமிழக வீரருக்கு வாய்ப்பிருக்கா?

திருவனந்தபுரம் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை கன மழை பெய்திருக்கிறது. இதனால் மைதானம் ஈரப்பதமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

India vs australia 2nd t20 - Playing xi might change according to pitch

இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் இருக்கிறது. இந்த நிலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தால் சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது எந்தப் பயனையும் தராது. இதன் காரணமாக இந்திய அணி இன்று கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டரை சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. அது சிஎஸ்கே வீரர் சிவம் துபே கூடவாக இருக்கலாம்.

இல்லையெனில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் தேவை என்று முடிவு செய்தால் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆல்ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்தலாம். முதல் டி20 போட்டியில் அதிக ரன்கள் கொடுத்திருந்தார். எனினும் அவருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இதன் காரணமாக இந்திய அணி மாற்றம் செய்ய வாய்ப்பு ஏதும் இல்லை என தெரிகிறது. அப்படி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ரவி பிஸ்னாய்க்கு பதில் சிவம் துபே வரலாம். இதேபோன்று ஆஸ்திரேலியா அணியில் இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் மற்றும் ஆடம் சம்பா ஆகியோர் அணிக்கு திரும்பலாம் என தெரிகிறது. எனினும் உலகக்கோப்பை தொடர் முடிந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகப்போகிறது.

இதனால் இந்த மூன்று வீரர்களுக்கும் மேலும் ஓய்வு வழங்க படலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் திரும்பினால் அது இந்தியாவுக்கு நிச்சயம் கடும் நெருக்கடியை கொடுக்கும். வானிலை ஆய்வு மைதானத்தின் தன்மையும் பொறுத்து இரண்டு அணியும் தங்களது பிளேயிங் லெவனில் கடைசி நேரத்தில் கூட மாற்ற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 26, 2023, 13:35 [IST]
Other articles published on Nov 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+