Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாம்பியன்னா பெரிய கொம்பா? ஒரே ஓவரில் ஆஸ்திரேலியாவை கதறவிட்ட ஜெய்ஸ்வால்.. பிச்சிட்டாரு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. குறிப்பாக இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி,ராகுல்,ஹர்திக் பாண்டியா,பும்ரா போன்ற வீரர்கள் இல்லை.

சூரியகுமார் யாதவ் தலைமையில் ஜெய்ஸ்வால் ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் தான் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் தொடக்க வீரர்களாக இருவரும் இன்றைய ஆட்டத்தில் விளையாடினார்கள்.

India vs australia 2nd t20 - Yashasvi jaiswal hits 24 runs in a single over

ஆடுகளும் கொஞ்சம் தொய்வாக தெரிந்தது. இதனால் பந்து புதிதாக இருக்கும் போதே ரன்களை வாரி குவிக்க வேண்டும் என முடிவெடுத்த ஜெய்ஸ்வால், 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை பதம் பார்த்தார். குறிப்பாக ஆட்டத்தில் நான்காவது ஓவரில் ஷான் அபார்ட் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் கிழித்து தொங்க விட்டார்.

முதல் மூன்று பந்துகளில் ஹார்ட்ரிக் பவுண்டரிகளை விளாசிய ஜெயஸ்வால் நான்காவது பந்தில் ஒரு சிக்சர் ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர் என மொத்தம் 24 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்தியாவில் பவர் பிளே முடிவில் 77 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஷ்வான் 25 பந்துகளில் 53 ரன்களை குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

ஸ்ட்ரைக் ரேட் 212 என்ற அளவில் இருந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர் பிளேவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். இன்றைய ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வெற்றி பெற கொஞ்சமாவது வாய்ப்பிருக்கும்.

இதனால் தொடக்க வீரர்கள் பயமின்றி இன்றைய ஆட்டத்தில் விளையாடி வருகிறார்கள். இதனை அடுத்து இசான் கிஷனும் அதிரடியாக விளையாடும் 30 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இது மூன்று பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். 15 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

Story first published: Sunday, November 26, 2023, 20:36 [IST]
Other articles published on Nov 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+