Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை தான் ஆஸ்திரேலியா குறி வைத்து அடித்தது.. டீமை விட்டு தூக்கிட்டு ஸ்விங் பவுலரை சேருங்க

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மிட்செல் ஸ்டார்க் போல பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் பவுலர்கள் இந்திய அணியில் இல்லாதது தான் இந்த மோசமான தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், இரண்டாவது போட்டியில் படுதோல்வியை சந்தித்து உள்ளது இந்திய அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றாலும், பந்துவீச்சில் பும்ராவை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தும் பந்துவீச்சாளர் என யாரும் இல்லை என்பதும் முக்கிய காரணமாக இருந்தது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs


தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் ஆற்றல் உள்ள பவுலர் என்றால் அது ஆகாஷ் தீப் மட்டுமே. ஆகாஷ் தீப்பின் ஸ்விங் பந்து வீச்சு அத்தனை சிறந்தது என சொல்ல முடியாவிட்டாலும் இப்போதைக்கு இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அவர் தான்.

ஆனாலும், அவரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அறிமுக வீரரான ஹர்ஷித் ராணாவை இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். ஹர்ஷித் ராணா முதல் போட்டியில் விக்கெட்கள் வீழ்த்திய போதும், இரண்டாவது போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அவரை குறிவைத்து ரன் சேர்த்தனர். பும்ரா மற்றும் முகமது சிராஜ் பந்து வீசி முடித்த பின் ஹர்ஷித் ராணா பந்து வீசினார். அதை ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டு எளிதாக ரன் சேர்த்தனர். அவரது ஒரு ஓவரில் 17 ரன்கள் அடித்தது அதற்கு சிறந்த உதாரணம் ஆகும். எனவே, மூன்றாவது போட்டியில் ஹர்ஷித் ராணாவை நீக்கி விட்டு, ஆகாஷ் தீப்பை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற குரல் எழத் துவங்கி உள்ளது.

Story first published: Sunday, December 8, 2024, 19:54 [IST]
Other articles published on Dec 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+