For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

39 வருட விக்கெட் சாதனையை முறியடித்த பும்ரா.. இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பும்ரா அசத்தலாக பந்து வீசினார்.
முதல் இன்னிங்க்ஸில் ஆறு விக்கெட்கள் எடுத்த பும்ரா, 39 வருட இந்திய சாதனை ஒன்றை உடைத்துள்ளார். அப்படி என்ன சாதனையை முறியடித்துள்ளார்?

45 விக்கெட்கள் எடுத்த பும்ரா

45 விக்கெட்கள் எடுத்த பும்ரா

பும்ரா 2018ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். தன் அறிமுக ஆண்டிலேயே கலக்கி வரும் அவர் தற்போது நடை பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸ்-ஐ சேர்த்து இந்த ஆண்டில் 45 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

1979இல் திலீப் ஜோஷி

1979இல் திலீப் ஜோஷி

முன்னாள் இந்திய வீரர் திலீப் ஜோஷி 1979ஆம் ஆண்டில் தன் அறிமுக ஆண்டில் 40 டெஸ்ட் விக்கெட்கள் எடுத்து இருந்ததே இந்திய அளவில் ஒரு அறிமுக வீரர் எடுத்த அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்களாக இருந்தது.

39 ஆண்டு சாதனை முறியடிப்பு

39 ஆண்டு சாதனை முறியடிப்பு

அந்த சாதனையை முறியடித்துள்ளார் பும்ரா. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 39 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த பும்ரா, முதல் இன்னிங்க்ஸில் எடுத்த 6 விக்கெட்களை அடுத்து, திலீப் ஜோஷியை முந்தி அறிமுக ஆண்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் 39 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் பும்ரா.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

இந்த பட்டியலில் தற்போது மூன்றாம் இடத்தில் வெங்கடேஷ் பிரசாத் 1996இல் எடுத்த 37 விக்கெட்களோடும், நான்காம் இடத்தில் நரேந்திர ஹிர்வானி 1988இல் எடுத்த 35 விக்கெட்களோடும் இருக்கின்றனர். ஐந்தாம் இடத்தில் 35 விக்கெட்களோடு இருப்பவர் ஸ்ரீசாந்த்.

அதிக விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்பு

அதிக விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்பு

பும்ரா இரண்டாம் இன்னிங்க்ஸிலும் பந்து வீசுவார் என்பதால் மேலும் அதிக விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா 39 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

Story first published: Friday, December 28, 2018, 12:55 [IST]
Other articles published on Dec 28, 2018
English summary
India vs Australia : A 39 year old Indian debut year record broken by Bumrah. He became best debut bowler in tests for India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X