For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா?பிசிசிஐ முக்கிய அப்டேட்

மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் புதன்கிழமை ராஜ்காட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் ராஜ்காட் வந்து அடைந்தார்கள்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பு விளையாடப்படும் கடைசிப் போட்டி என்பதால் முன்னணி வீரர்கள் பலரும் இந்த ஆட்டத்தில் பங்கேற்கிறார்கள். கடந்த இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித், விராட் கோலி,ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் கடைசி ஒரு நாள் போட்டிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

India vs australia 3ed odi - BCCI Clarification on bumrah participation

அதேவேளையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு கடைசி போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று அக்சர் பட்டேலும் காயத்திலிருந்து குணமடையாததால் அவரும் அணியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய தொடக்க வீரர் ருதுராஜ், முகேஷ் குமாரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக விடுவிக்கப்பட்ட இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விடுப்பு எடுத்த பும்ரா கடைசி போட்டிக்கு திரும்புவாரா என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பிசிசிஐ ஒரு விளக்கம் அளித்துள்ளது. உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பு சுழற்சி முறையில் பும்ராவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், தற்போது மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஒரே அணியாக ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த போட்டி முடிவடைந்த உடன் நேரடியாக இந்திய அணி கௌஹாத்திக்கு செல்கிறது அங்கு வரும் சனிக்கிழமை உலகக்கோப்பை காண பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

Story first published: Monday, September 25, 2023, 23:52 [IST]
Other articles published on Sep 25, 2023
English summary
India vs australia 3ed odi - BCCI Clarification on bumrah participation ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா?பிசிசிஐ முக்கிய அப்டேட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+