For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாரபட்சம் பார்க்காத அதிரடி ஆட்டம்.. இந்திய மண்ணில் புதிய சாதனை படைத்த பின்ச் - கவாஜா கூட்டணி!

ராஞ்சி : ஆஸ்திரேலிய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் 313 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது.

இந்த போட்டியில் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா அதிரடியாக ஆடி, நீண்ட கூட்டணி அமைத்தனர். அவர்களை பிரிக்க இந்திய அணி திணறியது

பின்ச் 93 ரன்கள்

பின்ச் 93 ரன்கள்

துவக்கம் முதல் 32வது ஓவர் வரை இணை பிரியாமல் ஆடிய இந்த இணை, பாரபட்சம் இல்லாமல் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்து வந்த இவர்கள், கூட்டணியாக 193 ரன்கள் குவித்தனர்.

சதம் நழுவியது

சதம் நழுவியது

31.5வது ஓவரில் ஆரோன் பின்ச் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். தொடர்ந்து ஆடிய கவாஜா தன் முதல் ஒருநாள் போட்டி சதம் அடித்து அசத்தினார்.

நான்காம் இடம்

நான்காம் இடம்

ஆரோன் பின்ச் - உஸ்மான் கவாஜா இணை குவித்த 193 ரன்கள் இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் எடுக்கப்பட்ட அதிகபட்ச கூட்டணி ரன்களில் நான்காம் இடம் பிடித்துள்ளது.

கூட்டணி ரன்கள் பட்டியல்

கூட்டணி ரன்கள் பட்டியல்

இந்திய மண்ணில், இந்திய அணிக்கு எதிராக கூட்டணி அமைத்து எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் பட்டியல் இது தான் -

235 ரன்கள், கேரி கிர்ஸ்டன் - ஹெர்ஷல் கிப்ஸ், கொச்சி, 2000

231 ரன்கள், ஆரோன் பின்ச் - டேவிட் வார்னர், பெங்களூரு, 2017

212 ரன்கள், மார்ஷ் - டேவிட் பூன், ஜெய்ப்பூர், 1986

193 ரன்கள், ஆரோன் பின்ச் - உஸ்மான் கவாஜா, ராஞ்சி, 2019

ஆஸி. 193 ரன்கள்

ஆஸி. 193 ரன்கள்

ஆரோன் பின்ச் - கவாஜா இணை 193 ரன்கள் குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணியில் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 313 ரன்கள் எடுத்தது.

Story first published: Friday, March 8, 2019, 17:54 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
India vs Australia 3rd ODI : Aaron Finch - Khawaja registered 4th highest partneship vs. India in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+