Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி!! இரண்டே ஓவரில் கேதார் ஜாதவ்-ஐ தெறிக்க ஓட விட்ட ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச்!

ராஞ்சி : ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்தார் ஆஸ்திரேலிய துவக்க வீரரும், கேப்டனுமான ஆரோன் பின்ச்.

அவர் தனது பேட்டிங்கின் போது கேதார் ஜாதவ் பந்துகளை தெறிக்க விட்டார். அதனால், கேதார் ஜாதவுக்கு, கேப்டன் கோலி ஓவர்களே கொடுக்கவில்லை.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 15வது ஓவரில் பந்து வீச கேதார் ஜாதவ்வை அழைத்தார் கோலி. ஜாதவ் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதால் அவர் இந்த முறையும் ரன்களை கட்டுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் பந்தில் சிக்ஸ்

முதல் பந்தில் சிக்ஸ்

எனினும், ஜாதவ் வீசிய முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வாயடைக்க வைத்தார் ஆரோன் பின்ச். அந்த பந்து போன இடம் தெரியவில்லை. பின்னர், தோனி, ஜாதவ்விடம் பேசினார். அதன் பின் இரண்டு பந்துகளை வைடுகளாக வீசினார் ஜாதவ். அந்த ஓவரில் 13 ரன்கள் கொடுத்தார்.

மூன்று பவுண்டரி

மூன்று பவுண்டரி

பின்னர், 17வது ஓவரை ஜாதவ் வீசிய போது, தொடர்ந்து மூன்று பந்துகளில் சிக்ஸ், ஃபோர், சிக்ஸ் என அடித்து மிரள வைத்தார் ஆரோன் பின்ச். அந்த ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார் ஜாதவ்.

ஓவரே இல்லை

ஓவரே இல்லை

2 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்த நிலையில், அத்தோடு ஜாதவ்வுக்கு ஓவர்களே கொடுக்கவில்லை கோலி. மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 5 அல்லது 6 ரன்கள் மட்டுமே கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிதாபமான ஜாதவ்

பரிதாபமான ஜாதவ்

ஆரோன் பின்ச் குறி வைத்து தாக்கியதால், கேதார் ஜாதவ் நிலை பரிதாபமானது. பின்னர், ஆரோன் பின்ச் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது.

Story first published: Friday, March 8, 2019, 19:06 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+