Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs ஆஸி 3வது ஒருநாள் போட்டி.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்..டிக்கெட் விலையை பாருங்க

சென்னை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

சென்னையில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு தான் சர்வதேச ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதின.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

 புதிய மைதானம்

புதிய மைதானம்

தற்போது பல நாட்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னை மைதானத்தில் பழைய கேலரிகள் இடிக்கப்பட்டு, தற்போது மீண்டும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

தற்போது புதிய மாற்றங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 13ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மார்ச் 13ஆம் தேதி முதலும் கவுண்ட்டர் டிக்கெட் மார்ச் பதினெட்டாம் தேதி 11 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை பட்டியல்

விலை பட்டியல்

இந்தப் போட்டிக்கான குறைந்த பட்ஜெட் டிக்கெட் விலை 1200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலை பத்தாயிரம் ரூபாய் ஆகும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலைகளின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி 1200 ரூபாய், 1500 ரூபாய் 3000 ரூபாய், 5000 ரூபாய், 6 ஆயிரம் ரூபாய், 8000 ரூபாய் ,10 ஆயிரம் ரூபாய் என ஏழு விலை மாதிரிகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

 கிரிக்கெட் போட்டிகள்

கிரிக்கெட் போட்டிகள்

பேடிஎம் ஆப் மூலம் டிக்கெட் விலை ரசிகர்கள் பெறலாம் சர்வதேச கிரிக்கெட் ஐபிஎல் என தொடர்ந்து சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் தமிழக ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் சென்னை ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திரநடைபெறுகிறது.

Story first published: Thursday, March 9, 2023, 14:35 [IST]
Other articles published on Mar 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+