For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாதி பேருக்கு வைரஸ் காய்ச்சல்.. மீதி பேர் விலகல்.. இந்திய அணி நிலைமை இதுதான்.. வெளியான உண்மை

ராஜ்கோட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பப் போகிறார்கள் என்ற தகவலால் உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்துக் கொண்டு இருக்கிறது.

இந்திய அணியில் பலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளது. அணியில் வெறும் 12 வீரர்களே இடம் பெற்று உள்ளனர். 13வதாக முகேஷ் குமார் என்ற ஒரு வீரரை அணியில் சேர்த்து உள்ளனர்.

 India vs Australia 3rd ODI : Half of the Indian players sick and left to home says Rohit Sharma

என்ன நடக்குது? : இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மட்டுமின்றி மாற்று வீரர்களையும் தயார் செய்யும் பகையில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது.

உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் கெயிக்வாட் போன்றோரும் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்குர் போன்ற ஃபார்மில் இல்லாத வீரர்கள் தங்கள் ஃபார்மை நிரூபிக்கும் வகையில், அவர்களுக்கு அணியில் இடம் அளித்து முதல் இரண்டு போட்டிகளில் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் போன்றோர் ஓய்வில் இருந்தனர்.

தற்போது ஓய்வில் இருந்த வீரர்கள் அணிக்கு திரும்பினர். நியாயமாக பார்த்தால் ஆஸ்திரேலியா உடனான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு அணியில் 18 வீரர்களுக்கும் மேல் ஆடத் இருக்க வேண்டும். ஆனால், 12 வீரர்களே உள்ளனர். அணியில் போதிய ஆள் இல்லாததால் முகேஷ் குமார் என்ற வீரரை தற்காலிகமாக அழைத்து உள்ளனர். அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆட வேண்டும். ஆனால், அவரை அணியில் கூடுதல் வீரராக சேர்த்து இருக்கின்றனர்.

ஏன் இந்த நிலை? : இது பற்றி பேசிய ரோஹித் சர்மா, அணியில் சில வீரர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக கூறினார். மேலும், ஹர்திக் பாண்டியா, ஷமி, சுப்மன் கில் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட சென்று விட்டனர் இந்த வாய்ப்பை விட்டால் அவர்கள் 50 நாட்களுக்கு வீட்டுக்கு செல்ல முடியாது.

அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்றுள்ள வாஷிங்க்டன் சுந்தரை சீனா செல்ல அனுப்ப வேண்டும். ஆனால் ஆள் இல்லாத காரணத்தால் அவரை ஆட வைக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. ஷமி இல்லாததால் இரண்டாவது போட்டிக்கு முன் தன் வீட்டுக்கு போன பும்ரா இரண்டே நாளில் மீண்டும் அணிக்கு திரும்பி விட்டார்.

இது இல்லாமல் இரண்டாவது போட்டியில் இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர்களை தவிர்த்து சிலருக்கு காய்ச்சல் என ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார். மேலே கூறப்பட்டுள்ள வீரர்களை தவிர்த்து அணியில் 13 வீரர்களே உள்ளனர். அதிலும் வைரஸ் காய்ச்சல் யாருக்கு உள்ளது என்பதை அவர் கூறவில்லை.

இந்த நிலையில், நிச்சயம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் காய்ச்சல் உள்ள இந்திய அணி வீரர்கள் சிலர் முழுமையாக களத்தில் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பீல்டிங் செய்ய வைக்க கூட அணியில் ஆள் இல்லை. இதுதான் இந்திய அணியின் தற்போதைய சூழ்நிலை. பீல்டிங் செய்ய ராஜ்கோட் மைதானத்தில் பயிற்சி செய்யும் உள்ளூர் வீரர்களை பிசிசிஐ அழைக்க உள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

உலகக்கோப்பை நேரத்தில்.. : வீரர்களுக்கு காயம், வைரஸ் காய்ச்சல் என வரும் செய்திகள் உலகக்கோப்பை சமயத்தில் அச்சம் ஊட்டுவதாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் நிச்சயம் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஆஸ்திரேலிய 3வது ஒருநாள் போட்டியில் இடம் பெற்றுள்ள 13 வீரர்கள் கொண்ட இந்திய அணி : ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், வாஷிங்க்டன் சுந்தர்.

Story first published: Wednesday, September 27, 2023, 12:25 [IST]
Other articles published on Sep 27, 2023
English summary
India vs Australia 3rd ODI : Half of the Indian players sick and left to home says Rohit Sharma ahead of World cup 2023.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+