இந்தியா -ஆஸ்திரேலியா 3வது போட்டி - இரு அணிகளும் அதிக ரன்களை குவிக்கும்
Recommended Video
பெங்களூரு : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் இறுதிப்போட்டி இன்று மதியம் பெங்களூருவின் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்களை குவித்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான ஆண்டின் முதல் சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டி கடுமையாக மற்றும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்றும் கூறலாம்.
இரண்டு அணிகளின் வீரர்களின் வரிசையும் தாறுமாறாக உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் களமிறங்கி வெற்றியை கைக்கொள்ள போராடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

3வது சர்வதேச ஒருநாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் 3 போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதன் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி இன்று மதியம் பெங்களூருவில் துவங்கவுள்ளது.

தலா ஒரு போட்டிகளில் வெற்றி
இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் மும்பை மற்றும் ராஜ்காட்டில் நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி அபாரம்
மும்பையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடுமையான போட்டி
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜ்காட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அதிக ரன்கள் மற்றும் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை இந்திய அணி ஓரங்கட்டியது.

வெற்றியை பெற இரு அணிகளும் தீவிரம்
கடந்த இரு போட்டிகளில் ரிஷப் பந்த், ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது 3வது போட்டியில் மாற்றங்கள் நிகழுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பரபரப்பான போட்டி
இரு அணிகளின் வரிசையும் சிறப்பாக உள்ள நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.


Click it and Unblock the Notifications