Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி பேச்சை கேட்கலைனா இப்படி தான்! 2வது ஓவரிலேயே டிஆர்எஸ்-ஐ வீணாக்கிய கேப்டன் கோலி!

ராஞ்சி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோலி மற்றும் பும்ரா இணைந்து டிஆர்எஸ் ரிவ்யூவை இரண்டாவது ஓவரிலேயே வீணடித்தனர்.

மூன்றாம் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா ஆட்டத்தை துவக்கினர்.

பும்ரா உறுதி

பும்ரா உறுதி

போட்டியின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்து ஆரோன் பின்ச்சின் காலில் பட்டது. பும்ரா உடனடியாக அவுட் கேட்டார். அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, பும்ரா தன் நிலையில் உறுதியாக இருந்தார்.

வேண்டாம் என்ற தோனி

வேண்டாம் என்ற தோனி

ரிவ்யூ கேட்கலாமா என்ற பரபரப்பான இந்த சமயத்தில் கோலி ரிவ்யூ கேட்க முடிவு செய்தார். தோனி கேட்க வேண்டாம் என்ற முடிவில் தான் இருந்தார். எனினும், பும்ரா, கோலியின் முடிவால் ரிவ்யூ கேட்கப்பட்டது.

அவுட் இல்லை

அவுட் இல்லை

பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. ஆனால், ஹாக்-ஐ ரீப்ளேவில் பந்து ஸ்டம்ப்களுக்கு மேலே உயரமாக செல்வது தெரிந்தது. டிஆர்எஸ் நிபுணரான தோனி கூறியது போலவே, இது அவுட் இல்லை என உறுதியானது.

கோலி மோசம்

கோலி மோசம்

தோனி பேச்சை கேட்காத கோலி, பும்ராவால் இந்தியா இரண்டாவது ஓவரிலேயே தன் டிஆர்எஸ்-ஐ இழந்துள்ளது. கோலி இத் போல டிஆர்எஸ்-ஐ வீணாக்குவது முதல் முறையல்ல. பல முறை மிக மோசமாக ரிவ்யூ கேட்டு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் கோலி.

தோனி இருந்துமா?

தோனி இருந்துமா?

அதே சமயம், மூத்த வீரர் தோனி டி.ஆர்.எஸ்-இல் அதிக முறை வெற்றி பெற்றவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். ரசிகர்கள் அவரது பெயரில், டி.ஆர்.எஸ் என்பது தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு சொதப்பியுள்ளார் கோலி.

Story first published: Friday, March 8, 2019, 15:51 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+