For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus 3rd ODI : விராட் கோலி சதம் வீண்.. தொடரில் முதல் வெற்றி பெற்றது ஆஸி.!

ராஞ்சி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி 314 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதை சேஸிங் செய்ய முடியாத இந்திய அணி 281 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி (கேப்டன்), அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி - ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மாக்ஸ்வெல், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஆடம் சாம்பா, பாட் கம்மின்ஸ், நாதன் லியோன், ரிச்சர்ட்சன்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரோன் பின்ச், கவாஜா அசத்தல் துவக்கம் அளித்து ஆடினர். பின்ச் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கவாஜா தன் முதல் ஒருநாள் போட்டி சதம் அடித்தார். மாக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 47 ரன்கள் குவித்தார். கடைசி பத்து ஓவர்களில் சுதாரித்த இந்திய அணி வரிசையாக விக்கெட்களை எடுக்க ஆஸி. அணியின் ரன் வேகம் குறைந்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது.

இந்தியா சேஸிங்

இந்தியா சேஸிங்

இமாலய இலக்கான 314 ரன்களை நோக்கி ஆடியது இந்திய அணி. வழக்கம் போல துவக்க வீரர் தவான் சொதப்பினார். அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் சர்மா 14, அம்பதி ராயுடு 2, தோனி 26, ஜாதவ் 26 ரன்களுக்கு வெளியேறினர்.

கோலி 41வது சதம்

கோலி 41வது சதம்

அடுத்து கேப்டன் கோலி தனியாளாக போராடி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். கோலி 123 ரன்களில் வெளியேற, இந்திய அணி 219 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்தது. அடுத்து விஜய் ஷங்கர் 32, ஜடேஜா 24 ரன்கள் எடுத்து நடையைக் கட்ட இந்தியாவின் தோல்வி உறுதியானது.

இந்தியா முதல் தோல்வி

இந்தியா முதல் தோல்வி

48.2 ஓவர்களில் இந்திய அணி 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா இந்த தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது தோல்வி அடைந்தாலும், இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

Story first published: Friday, March 8, 2019, 21:34 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
India vs Australia 3rd ODI Live score update. India won the toss and elected to field first.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+