Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு.. என்னப்பா ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி சொதப்புறீங்க?

ராஞ்சி : இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு ஆகியோர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் குவிக்காமல் ஆட்டமிழந்து கவலை அளித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இவர்கள் மூவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர்.

தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 314 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா ஆடிய போது ரோஹித் 14, தவான் 1, அம்பதி ராயுடு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

முதல் இரு போட்டிகள்

முதல் இரு போட்டிகள்

இதே ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் 37, தவான் 0, அம்பதி ராயுடு 13 ரன்கள் எடுத்திருந்தனர். இரண்டாம் போட்டியில் ரோஹித் 0, தவான் 21, அம்பதி ராயுடு 18 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ரோஹித் தடுமாற்றம்

ரோஹித் தடுமாற்றம்

ரோஹித் சர்மா ஒரு போட்டியில் 37 ரன்கள் எடுத்தாரே என சிலர் கேட்கலாம். அந்த 37 ரன்கள் 66 பந்துகளில் மிகவும் நிதானமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா அதிரடி வீரராக அறியப்படும் நிலையில் அவர் ரன் குவிக்க திணறி வருவது வெளிப்படையாக தெரிகிறது.

சொதப்பல் தவான், ராயுடு

சொதப்பல் தவான், ராயுடு

தவான், அம்பதி ராயுடு நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இருவரும் தொடர்ந்து சிறப்பான பேட்டிங் செய்வதில்லை என்ற புகார் பல மாதங்களாக இருக்கிறது. ஒரீரு போட்டிகளில் அரைசதம் அடிக்கும் இவர்கள், அதன் பின் தொடர்ந்து சொதப்புகின்றனர்.

மாற்று வீரர்கள் தயார்

மாற்று வீரர்கள் தயார்

தவான், ராயுடுவுக்கு மாற்று வீரர்களாக அணியில் இடம் பிடிக்க ராகுல், ரிஷப் பண்ட் தயாராக உள்ளனர். அதனால், இவர்கள் இருவரது நிலை சிக்கலாகி உள்ளது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் அடுத்த இரு போட்டிகளில் இவர்கள் இடம் பெறுவது கடினமே.

உலகக்கோப்பைக்கு முன் சறுக்கல்

உலகக்கோப்பைக்கு முன் சறுக்கல்

உலகக்கோப்பைக்கு இந்திய அணி முன்னோட்டம் பார்த்து வரும் நிலையில், டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து வரும் இவர்கள் மூவரும் ஒரே தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

Story first published: Friday, March 8, 2019, 20:12 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+