Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS 3வது போட்டி: டாஸ் மற்றும் பிளேயிங் 11 - முதலில் பேட்டிங் செய்யப் போவது யார்?

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸில் வென்றார். அவர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்து வென்றது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

India vs Australia 3rd ODI Toss and Playing XI Which team batting first

இந்தப் போட்டி நடைபெறும் சிட்னி ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதாக மிட்செல் மார்ஷ் கூறினார். அதே சமயம், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பியதாக கூறினார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டனர்.

இரு அணிகளின் விவரம்:

இந்தியா (ஆடும் லெவன்):

ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா (ஆடும் லெவன்):

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மாட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கூப்பர் கொன்னோலி, மிட்செல் ஓவன், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Story first published: Saturday, October 25, 2025, 8:28 [IST]
Other articles published on Oct 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+