இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி எப்போது? தேதி, இந்திய நேரம்.. எந்த மைதானத்தில் நடைபெறும்?
அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி எந்த மைதானத்தில் நடைபெற உள்ளது? அந்தப் போட்டி இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கி, எத்தனை மணிக்கு முடியும்? எந்தெந்த நாட்களில் போட்டி நடைபெறும்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. பார்டர் - கவாஸ்கர் டிராபி என அழைக்கப்படும் இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், மூன்றாவது போட்டி டிசம்பர் 14 அன்று துவங்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி எந்த மைதானத்தில், எந்தெந்த நாட்களில் நடைபெற உள்ளது?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்பு இந்த மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டை என வர்ணிக்கப்பட்டது. ஆனால், 2021 ஆம் ஆண்டு இந்திய அணி இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி எந்தெந்த நாட்களில், இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கி நடைபெறும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி அதிகாலை 5.50 மணிக்கு துவங்கும்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஒவ்வொரு நாளின் நேர அட்டவணை (இந்திய நேரப்படி) -
முதல் பகுதி - காலை 5.50 முதல் 7.50 மணி வரை
மதிய உணவு இடைவேளை - 7.50 முதல் 8.30 மணி வரை
இரண்டாம் பகுதி - 8.30 முதல் 10.30 மணி வரை
தேநீர் இடைவேளை - 10.30 முதல் 10.50 மணி வரை
மூன்றாம் பகுதி - 10.50 முதல் 12.50 மணி வரை
ஆட்டத்தின் மூன்றாம் பகுதி அம்பயர்களின் முடிவைப் பொறுத்து சில நிமிடங்கள் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
Story first published: Sunday, December 8, 2024, 19:03 [IST]
Other articles published on Dec 8, 2024


Click it and Unblock the Notifications