Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: நான்கே ஓவர்களுடன் நின்ற போட்டி.. நொந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள்.. இந்திய வீரர்கள் குஷி

பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டம் மழையால் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. ஆட்டம் துவங்கியவுடன் இந்திய அணி நான்கு ஓவர்கள் ஆடியது. அத்துடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை முடிவுக்கு கொண்டு வந்தது. அதன் பின் இந்திய அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்திய அணி 2 ஓவர்கள் மட்டுமே ஆடிய நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் ஆஸ்திரேலிய அணி நொந்து போனது.

நான்காம் நாள் முடிவில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து இருந்தது. ஐந்தாம் நாளின் துவக்கத்தில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தயாரானது. ஆனால், அதற்குள் மழை குறுக்கிட்டது. கடுமையான மழை பெய்ததால் வீரர்கள் அனைவரும் ஓய்வறையில் முடங்கினர்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

மழை கடுமையாக இருந்ததால் உணவு இடைவேளை வரை இரு அணி வீரர்களும் ஓய்வறையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த தாமதத்தால் நொந்து போனார்கள். அந்த அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், எப்படியாவது இந்திய அணியை அதிக ஓவர்கள் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட வைத்து ஆல் அவுட் செய்யலாம் என்ற எண்ணத்தில் உள்ளது.

ஆனால், ஐந்தாம் நாள் அன்று முதல் பகுதி முழுவதும் மழையால் காலியானது. இந்த போட்டியில் இதுவரை 11 முறை மழை குறுக்கிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்டத்தில் மழையின் காரணமாக 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. அதன் பின் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது.

அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஐந்தாம் நாள் அன்று காலையில் முடித்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஐந்தாம் நாளிலும் மழை பெய்து வரும் நிலையில் இந்த போட்டியில் டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்பு உள்ளது.

ஐந்தாம் நாள் அன்று உணவு இடைவேளைக்கு பின் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆடியது. அந்த அணி 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் டிரா செய்தது. இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

Story first published: Wednesday, December 18, 2024, 8:32 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+