Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 30 நிமிடங்களில் இப்படியா.. 3வது டெஸ்ட் போட்டியில் ஷாக்கான வீரர்கள்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளன்றே இரு அணி வீரர்களுக்கும் பல்வேறு அதிர்ச்சி விஷயங்கள் காத்திருந்த சூழலில், தற்போது ஐசிசி எடுத்துள்ள முடிவால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி டாஸில் வென்றும் தோல்வி நிலைக்கு சென்றுவிட்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அனைவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க வெறும் 109 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதற்கெல்லாம் காரணம் பிட்ச் தந்த ட்விஸ்ட் தான்.

 பிட்ச்-ன் மாற்றம்

பிட்ச்-ன் மாற்றம்

ஹோல்கர் மைதானத்தில் சிகப்பு மண் இருப்பதால் முதல் 2 நாட்களுக்கு அதிக பவுன்ஸ் இருக்கும் என்று தான் எண்ணினர். ஆனால் அதற்கு நேர்மாறாக படு மோசமாக டேர்ன் ஆனது. குறிப்பாக நாதன் லியோன் 8.3 டிகிரி அளவிற்கு திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்ததில் 50 சதவீதம் கூட பந்து பவுன்ஸ் ஆகவில்லை. இதனால் முதல்நாளிலேயே இந்தியா ஆல் அவுட்டாகியும், ஆஸ்திரேலியா 4 விக்கெட்களையும் இழந்துவிட்டது.

வெறும் 3 நாட்கள்

வெறும் 3 நாட்கள்

இந்திய களங்களில் பொதுவாக 3வது நாளில் இருந்து தான் பந்து டேர்ன் ஆக தொடங்கும். ஆனால் இங்கு போட்டி தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அப்படி நடந்துவிட்டது. இதனால் முந்தைய 2 போட்டிகளை போலவே இந்த போட்டியும் 3 நாட்களுக்குள் முடிந்துவிடும் என தெரிகிறது. இந்நிலையில் பிட்ச் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

இந்த போட்டியை நன்கு கவனித்து வரும் ஐசிசி நடுவர் கிறிஸ் போர்ட், பிட்ச் மோசமாக இருந்ததாக ஐசிசி- நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஹோல்கர் மைதானத்திற்கு படுமோசமான பிட்ச் என்ற ஸ்டாரை ஐசிசி கொடுக்கவுள்ளது. ஏற்கனவே முதல் 2 போட்டிகள் நடந்த நாக்பூர் மற்றும் டெல்லி களங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள சூழலில் மீண்டும் வெடித்துள்ளது.

2வது நாள்

2வது நாள்

இது ஒருபுறம் இருக்க, முதல் நாளில் இருந்ததை போல 2வது நாளில் பெரிய அளவில் ஸ்பின் ஆகவில்லை. நேரம் போக போக டேர்ன் குறைந்துள்ளது. குறிப்பிட்ட லெந்த் மற்றும் லைனில் வீசினால் மட்டுமே மேஜிக் நடக்கின்றன. இதனால் விக்கெட்டை எடுக்க இந்திய பவுலர்கள் போராடி வருகின்றனர். 160 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியை 250 ரன்களுக்குள் சுருட்டியே தீர வேண்டும்

Story first published: Thursday, March 2, 2023, 9:59 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+