Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: 100 ஆண்டுகளாக எந்த பவுலரும் தொடாத ரெக்கார்டை செய்த பும்ரா.. ஆஸ்திரேலிய மண்ணில் கிங்

பிரிஸ்பேன்: தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்து வருகிறார் பும்ரா. அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார்.

சுமார் 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறந்த பவுலிங் செயல்பாட்டை பும்ரா பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 20 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்திய வெளிநாட்டு பந்துவீச்சாளர்களில் மிகக் குறைந்த பவுலிங் சராசரி வைத்துள்ள பந்துவீச்சாளர் பும்ரா தான். இது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

மற்ற இந்திய அணி பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் தனி ஆளாக 28 ஓவர்கள் பந்து வீசி 76 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஒரு ஓவருக்கு மூன்று ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவர் செய்துள்ள ஒரு குறிப்பிட்டத்தக்க சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் மட்டும் அவர் 50 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த மைல்கல் சாதனையில் அவரது பவுலிங் சராசரி பெரும் வியப்பை அளிப்பதாக உள்ளது.

அவர் ஆஸ்திரேலிய மண்ணில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அவரது பவுலிங் சராசரி 17.82 ஆக உள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு 18 ரன்கள் விட்டுக் கொடுக்கும் போதும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இது அசாதாரணமான செயல்பாடாகும்.

டெஸ்ட் போட்டிகளில் பவுலிங் சராசரி 25 இருந்தாலே அது சிறந்த செயல்பாடு ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொரு முறை 25 ரன்களை விட்டுக் கொடுக்கும் போதும் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே சிறந்த பவுலராக அடையாளம் காணப்படுவார். இந்த நிலையில், பும்ரா ஆஸ்திரேலியா மண்ணில் 20க்கும் குறைவான பவுலிங் சராசரியை வைத்துள்ளார்.

அதே போல தென்னாப்பிரிக்காவில் அவரது பவுலின் சராசரி 20.76 ஆக உள்ளது. இந்தியாவில் 17.19 ஆக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ்-இல் 9.23 ஆக உள்ளது. நியூசிலாந்தில் மட்டுமே சற்று அதிகமாக 31.66 என்பதாக உள்ளது. நியூசிலாந்தில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் அவரது பவுலிங் சராசரி 26.27 என்பதாக உள்ளது.

பும்ராவின் ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டி பவுலிங் சராசரி 19.71 ஆகும். இது மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி செயல்பாடாக பார்க்கப்படுகிறது. தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிடையே இதுதான் மிகச் சிறந்த பவுலிங் சராசரியாகும்.

Story first published: Monday, December 16, 2024, 13:59 [IST]
Other articles published on Dec 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+