Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவின் மாஸ்டர்பிளான்.. ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த அடி.. 38 ரன்னுக்கு 2 விக்கெட் காலி.. என்ன நடந்தது?

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்திய அணிக்கு விக்கெட் கிடைக்காமல் இருந்த நிலையில் தனது பந்து வீச்சில் புதிய திட்டத்தை செயல்படுத்தினார். இந்திய அணியின் மற்ற வேகப் பந்துவீச்சாளர்களையும் அதே திட்டத்தை செயல்படுத்த வைத்தார்.

இதை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

காபா மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டி நேற்று துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மழையின் காரணமாக 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. அப்போது முதல் 6 ஓவர்கள் வரை பந்து ஸ்விங் ஆகும் என நினைத்து பும்ரா மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப பந்து வீசி வந்தனர். ஆனால், இந்திய அணியின் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அந்த பிட்ச்சில் பந்து ஸ்விங் ஆகவில்லை. அதை பும்ரா உறுதிப்படுத்தும் காட்சி ஒன்றும் கூட நேரலையில் காட்டப்பட்டது. அதன் பின் அவர் பந்துவீச்சு திட்டத்தை மாற்றினார். அடுத்த 7 ஓவர்களில் இந்திய வேகப்
பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்து வீசும் முறையை மாற்றினர்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். இந்த நிலையில் இரண்டாவது நாள் இன்று ஆட்டம் மீண்டும் துவங்கியது. முதல் நாள் என்ன செய்வது எனத் தெரியாமல் திட்டங்களை மாற்றிக் கொண்டிருந்த இந்திய அணி இப்போது தெளிவாக ஒரே நேர்கோட்டில் பயணிக்க தொடங்கியது.

பும்ரா பந்தை அதிக தூரம் பிட்ச் ஆகும் வகையில் வீசினார். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்க முற்பட்டனர். ஆனால், லைன் மற்றும் லென்த் கட்டுக்கோப்பாக இருந்ததை அடுத்து துவக்க வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் உஸ்மான் கவாஜா அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்த நிலையிலும், நாதன் மெக்ஸ்வீனி 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பின் நிதிஷ்குமார் ரெட்டி, பும்ராவின் அதே பவுலிங் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பந்து வீசி மார்னஸ் லாபுஷேன் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

Story first published: Sunday, December 15, 2024, 7:48 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+