For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

AUS vs IND: நீயெல்லாம் மனுஷனே இல்லை.. இந்திய அணியை கதறவிட்ட ஆஸ்திரேலிய வீரர் .. 3 வது சதம்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை சோதித்தார். இந்திய அணிக்கு எதிராக அவர் ஆடிய கடைசி ஏழு இன்னிங்ஸ்களில் அவர் மூன்று சதங்கள் உட்பட ஐந்து முறை 50 ரன்களுக்கும் அதிகமாக ரன் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

காபா மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் உடன் கூட்டணி அமைத்த ட்ராவிஸ் ஹெட் 115 பந்துகளில் சதம் கடந்தார். 152 ரன்கள் குவித்த பின்னரே அவர் ஆட்டமிழந்தார். அவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை கடந்தது.

ட்ராவிஸ் ஹெட் இந்திய அணியின் சிம்ம சொப்பனமாகவே மாறி வருகிறார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து இந்திய அணியின் உலகக் கோப்பை கனவை உடைத்த இவர் தற்போது டெஸ்ட் தொடரிலும் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

முன்னதாக அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். தற்போது பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 79 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அதன் பின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக ஆடிய நிலையில், ட்ராவிஸ் ஹெட் விரைவாக ரன் சேர்த்தார்.

அவர் இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார். கடைசி 7 இன்னிங்ஸ்களில் அவர் இந்திய அணிக்கு எதிராக மூன்று சதம் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்டத்தால் இந்திய அணி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது.

மறுபுறம் ஸ்டீவன் ஸ்மித் அரை சதம் கடந்தார். அவர் நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் ஃபார்ம் இழந்து தவித்து வந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு எதிராக தனது ஃபார்மை மீட்டு இருக்கிறார். இவர்கள் இருவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி எளிதாக 300 ரன்களை கடந்தது. ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும், ட்ராவிஸ் ஹெட் 152 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி

Story first published: Sunday, December 15, 2024, 10:22 [IST]
Other articles published on Dec 15, 2024
English summary
India vs Australia 3rd Test: Travis Head became a head ache for Indian bowling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+