Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்பதி ராயுடு, ஜடேஜா நீக்கம்! இப்படி ஆடினா தூக்காம என்ன பண்ணுவாங்க.. காரணம் இது தான்!

மொஹாலி : அம்பதி ராயுடு மற்றும் ஜடேஜா இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை.

ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக செயல்படாத இருவரும், அணியில் தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

வாய்ப்பு

வாய்ப்பு

உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அம்பதி ராயுடு, ஜடேஜா இந்திய அணியில் வாய்ப்பு பெற்றதால், இவர்களது உலகக்கோப்பை வாய்ப்பு உறுதி ஆகிவிட்டது என்ற நிலை இருந்தது.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

எனினும், ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அம்பதி ராயுடு வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். ராயுடு நியூசிலாந்து தொடரில் சிறப்பாக அஆடி இருந்தாலும், இந்த தொடரில் மூன்று போட்டிகளில் தொடர்ந்து மிக மோசமாக ஆடியது, அடுத்த வீரருக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது.

கோட்டை விட்ட ஜடேஜா

கோட்டை விட்ட ஜடேஜா

மறுபுறம் ஜடேஜா ரன்களைக் கட்டுப்படுத்தினாலும், விக்கெட் வீழ்த்தத் தவறினார். அவர் மூன்று போட்டிகளில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பேட்டிங்கிலும் தேவையான நேரத்தில் ஜடேஜா ரன் குவிக்கவில்லை. இதனால், உலகக்கோப்பை அணியில் இடம் பெற கிடைத்த கடைசி வாய்ப்பில் கோட்டை விட்டுள்ளார் ஜடேஜா.

ராகுலுக்கு வாய்ப்பு

ராகுலுக்கு வாய்ப்பு

இந்த நிலையில், நான்காவது ஒருநாள் போட்டியில் அம்பதி ராயுடுவை நீக்கி விட்டு, ராகுல் களமிறக்கப்பட்டார். ராகுல் டி20 தொடரில் சிறப்பாக ஆடி விட்டு ஒருநாள் அணியில் இடம் கிடைக்குமா என காத்துக் கொண்டு இருந்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சாஹல் இடம் பெற்றார்

சாஹல் இடம் பெற்றார்

முதலில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத ஜடேஜா, பண்டியாவின் காயத்தால் அணியில் இடம் பிடித்தார். அப்படி கிடைத்த அரிய வாய்ப்பை வீணடித்த ஜடேஜா, தன் இடத்தை சாஹலிடம் இழந்துள்ளார்.

Story first published: Sunday, March 10, 2019, 19:22 [IST]
Other articles published on Mar 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+