For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. சொத்தை டீம்னு யார் சொன்னா? சேஸிங்கில் வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா!

Recommended Video

சேஸிங்கில் வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா!- வீடியோ

மொஹாலி : ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி நிர்ணயித்த 359 ரன்கள் இலக்கை எட்டி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த சேஸிங் பல சாதனைகளை முறியடித்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. முக்கியமாக பலவீன அணியாக அறியப்பட்ட ஆஸ்திரேலிய அணியை இனி அப்படி யாரும் கூற முடியாது என்ற நிலையை உண்டாகி உள்ளது அந்த அணி.

ஆஸ்திரேலியாவின் சாதனை

ஆஸ்திரேலியாவின் சாதனை

ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச ரன் சேஸ் 359 ரன்கள் தான். மொஹாலி போட்டியில் அந்த சாதனையை செய்தது ஆஸ்திரேலிய அணி. இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 334 ரன்கள் சேஸ் செய்து இருந்ததே அந்த அணியின் அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை நேற்று முறியடித்து.

இந்திய அணிக்கு எதிராக..

இந்திய அணிக்கு எதிராக..

மேலும், இந்திய அணிக்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிக பட்ச ரன் சேஸ் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாகிஸ்தான் அணி இதே மொஹாலி அரங்கில் 322 ரன்கள் சேஸ் செய்து இந்திய அணியை வீழ்த்தி இருந்ததே, இந்திய அணிக்கு எதிராக அதிகபட்ச ரன் சேஸ் ஆகும்.

தென்னாப்பிரிக்கா முதல் இடம்

தென்னாப்பிரிக்கா முதல் இடம்

உலகளவில் இந்த ரன் சேஸ் ஐந்தாம் இடத்தை பிடித்தது. முதல் இரண்டு இடங்களில் ஆஸ்திரேலிய அணியை இருமுறை வீழ்த்தி சாதனை ரன் சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா உள்ளது. முதல் இடத்தில் 435 ரன்கள், இரண்டாம் இடத்தில் 372 ரன்கள் ரன் சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா இடம் பெற்றுள்ளது.

ஆஸி. ஐந்தாம் இடம்

ஆஸி. ஐந்தாம் இடம்

மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து 361 ரன்களும், நான்காம் இடத்தில் இந்தியா 360 ரன்களும் ரன் சேஸ் செய்து இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 359 ரன்கள் ரன் சேஸ் செய்து ஆஸ்திரேலியா ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

தோல்வி

தோல்வி

மேலும், 358 ரன்கள் குவித்த இந்திய அணி 27வது முறையாக 350+ ரன்கள் குவித்தது. முதலில் பேட்டிங் செய்து 24வது முறையாக 350+ ரன்கள் குவித்தது இந்தியா. இதில் சோகம் என்னவென்றால் முதல் முறையாக 350+ ரன்களை குவித்து இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Monday, March 11, 2019, 12:15 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
India vs Australia 4th ODI : Australia registered record run chase at Mohali
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+