For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - ஆஸி. 4வது ஒருநாள் போட்டி தான் கடைசி.. இனிமே மொஹாலியில் மேட்ச் நடக்காது?!

Recommended Video

இந்தியா - ஆஸி. 4வது ஒருநாள் போட்டி தான் கடைசி

மொஹாலி : மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள கடைசி சர்வதேச போட்டி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி தான் என ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மொஹாலி மைதானம் பஞ்சாப் கிரிக்கெட் அமைப்புக்கு சொந்தமானது. இந்தியாவின் முக்கியமான மைதானங்களில் ஒன்றாக இருக்கும் மொஹாலிக்கு என்ன ஆனது?

பல போட்டிகள்

பல போட்டிகள்

பல முக்கிய போட்டிகளை, சாதனைகளை கண்டுள்ளது மொஹாலி மைதானம். கடந்த 1994 முதல் இந்தியா - ஆஸி. மோதும் 4வது ஒருநாள் போட்டியுடன் சேர்த்து இதுவரை 25 ஒருநாள் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

முக்கிய நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வுகள்

இந்த மைதானத்தில் தான் இந்திய அணி 2011 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதே மைதானத்தில் தான் சச்சின், பிரையன் லாராவை முந்தி அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை செய்தார்.

அடுத்த மைதானம் தயார்

அடுத்த மைதானம் தயார்

இந்த மைதானம் தற்போது நல்ல நிலையில் இருந்தாலும், பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பு மற்றொரு மைதானம் ஒன்றை முல்லான்பூர் என்ற இடத்தில் உருவாக்கியுள்ளது. அந்த மைதானம் கடந்த ஜனவரி 2017ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

முல்லான்பூர் மைதானம்

முல்லான்பூர் மைதானம்

சுமார் 38.2 ஏக்கர் நிலத்தில், 38,000 இருக்கை வசதிகளுடன், இந்தியாவின் சிறந்த மைதானங்களுள் ஒன்றாக இடம் பெறும் வகையில் முல்லான்பூர் மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே, இனி பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பு சர்வதேச போட்டிகளுக்கு ஒரு மைதானம், உள்ளூர் போட்டிகளுக்கு ஒரு மைதானம் என பிரித்து போட்டிகளை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் முடியட்டும்

ஐபிஎல் முடியட்டும்

அப்படி பிரிக்கப்பட்டால், மொஹாலி மைதானத்தில் உள்ளூர் போட்டிகளும், முல்லான்பூர் மைதானத்தில் சர்வதேச போட்டிகளும் நடைபெறும். இந்த முடிவு இன்னும் நடைமுறையில் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடருக்கு பின்னர் மொஹாலி மைதானம் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஐசிசி அகாடமி ஆகுமா?

ஐசிசி அகாடமி ஆகுமா?

மேலும், ஐசிசி அகாடமி ஒன்றை இங்கே நிறுவவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி நடந்தால், பல நாட்டு வீரர்களும் இங்கே வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, March 10, 2019, 14:41 [IST]
Other articles published on Mar 10, 2019
English summary
India vs Australia 4th ODI could be the last International game in Mohali stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+