For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரும்னு நினைச்சோம் வரலை! வராதுன்னு நினைச்சோம் வந்துருச்சு! தோல்விக்கு சப்பைக்கட்டு கட்டும் தவான்!

மொஹாலி : இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு என்ன காரணம் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தவான் கூறினார். 2 போட்டிகளின் தொடர் தோல்விக்கு அவர் சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருந்தது.

பனித்துளிகள் காரணம்

பனித்துளிகள் காரணம்

தோல்விக்கு தவான் சொல்லும் காரணம் இது தான் - மூன்றாவது போட்டியில் பனித்துளிகள் வரும் என நினைத்தது இந்திய அணி. ஆனால், வரவில்லை. நான்காவது போட்டியில் பனித்துளிகள் வராது என நினைத்த நிலையில், பனித்துளிகள் அதிகம் வந்தது. இது எப்படி தோல்விக்கு காரணமாகும்?

மூன்றாவது போட்டியில்..

மூன்றாவது போட்டியில்..

மூன்றாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 281 ரன்களுக்கு சுருண்டது.

தவறான ஊகம்

தவறான ஊகம்

இந்த போட்டியில், பேட்டிங் பிட்ச்சில் இந்தியா டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்யாமல் பந்துவீச்சை தேர்வு செய்ய காரணம், இரண்டாம் பாதியில் பந்து வீசும் அணிக்கு "பனித்துளிகள்" பெரிய சிக்கலாக மாறி, சுழற் பந்துவீச்சில் கோட்டை விடும் என்ற ஊகம் தான். ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதை தான் தவான் சுட்டிக் காட்டியுள்ளார்.

4வது போட்டியில் என்ன ஆச்சு?

4வது போட்டியில் என்ன ஆச்சு?

அதே போல நான்காவது போட்டியில் பனித்துளிகள் வராது என நினைத்து இந்திய அணி இரண்டாம் பாதியில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த முறையும் கணக்கு தவறாகி காற்றில் பனித்துளிகள் இருந்ததால், சுழற் பந்துவீச்சு வேலை செய்யவில்லை என்பதே தவான் சொல்லும் காரணம்.

நம்பற மாதிரியா இருக்கு?

நம்பற மாதிரியா இருக்கு?

இந்திய அணி இன்று கிரிக்கெட் உலகின் முன்னணி அணியாக விளங்கும் நிலையில், பனித்துளி வரும், வராது என திட்டமிட்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது. மேலும், அணியில் வீரர்களை பயன்படுத்திய விதத்தில் தான் பல தவறுகள் உள்ளன.

கேலிக்கூத்து

கேலிக்கூத்து

அந்த தவறுகளை விட "பனித்துளிகள்" தான் தோல்விக்கு காரணம் என கூறி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. மூன்றாவது போட்டியில், இடைவெளி விடாமல் தொடர்ந்து ரன் எடுப்பதில் திறமை வாய்ந்த விஜய் சங்கரை ஏழாவது இடத்தில் களமிறங்கினார். அவருக்கு முன் தோனி, கேதார் ஜாதவ்வை களமிறங்கினர். ஆனால், இது பலனளிக்கவில்லை.

ஏன் ஓவர் கொடுக்கலை?

ஏன் ஓவர் கொடுக்கலை?

அதே போல, நான்காவது போட்டியில் இரண்டாம் பாதியில் பனித்துளிகள் அதிகரித்தது என்ற நிலையில், இந்திய அணி விஜய் ஷங்கரின் மீதமிருந்த ஐந்து ஓவர்களை கடைசி வரை பயன்படுத்தாதது ஏன்? கேதார் ஜாதவ், சாஹல் இருவரும் ஓவருக்கு எட்டு ரன்கள் கொடுத்த நிலையில், தான் வீசிய ஐந்து ஓவர்களில் ஓவருக்கு 5.80 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்த விஜய்க்கு ஏன் கடைசி சில ஓவர்களில் வாய்ப்பு அளிக்கவில்லை?

சப்பைக் கட்டு

சப்பைக் கட்டு

மூன்று மற்றும் நான்காவது போட்டிகளின் தோல்விக்கு இது போல பல காரணங்கள் உள்ளன. ஆனால், பனித்துளிகள் மட்டுமே காரணம் என கூறி இருப்பது சப்பைக் கட்டு தான். இது போன்ற காரணத்தை உலகக்கோப்பை தொடரிலும் சொல்லாமல் இருந்தால் சரி.

Story first published: Monday, March 11, 2019, 17:47 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
India vs Australia 4th ODI : Dhawan revealed why India lost 2 matches back to back
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+