Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்புகளை வீணடித்த ரிஷப் பண்ட்.. கடுப்பான கோலி.. தோனியை மிஸ் செய்த ரசிகர்கள்!

Recommended Video

கிடைத்த வாய்ப்புகளை வீணடித்த ரிஷப் பண்ட்- வீடியோ

மொஹாலி : நான்காவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் பல முறை விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார்.

தோனி போல கீப்பிங் செய்ய முயன்ற ரிஷப் பண்ட், அதில் பாதி கிணறைக் கூட தாண்ட முடியாமல் சிரமப்பட்டார். 44வது ஓவரில் இரண்டு முறை சொதப்பினார் ரிஷப் பண்ட்.

ஸ்டம்பிங் வாய்ப்பு

ஸ்டம்பிங் வாய்ப்பு

44வது ஓவரை சாஹல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மொஹாலி போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்றி தேடித் தந்த டர்னரை ஸ்டம்பிங் செய்ய அரிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

வாய்ப்பை வீணடித்தார்

வாய்ப்பை வீணடித்தார்

ஆனால், ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் வாய்ப்பை வீணடித்தார். அப்போது இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் வாய்ப்பை கோட்டை விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரன் அவுட் வாய்ப்பு

ரன் அவுட் வாய்ப்பு

அடுத்து, அதே ஓவரின் மூன்றாவது பந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த கேரியின் காலில் பட்டு அருகே விழுந்தது. அதை பயன்படுத்தி ரன் ஓட முயன்றார் கேரி. ரன் அவுட் செய்ய அரிய வாய்ப்பு கிடைத்தது.

தவறிய பந்து

தவறிய பந்து

ரிஷப் பண்ட் அப்போது, தோனி போல ஸ்டம்ப்பை பார்க்காமல் பந்தை எடுத்து கால் வழியே ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார். ஆனால், பந்து தவறிச் சென்றது. பந்தை பிடிக்க பீல்டர்கள் இல்லை என்பதால், கேரி எளிதாக ஒரு ரன் ஓடி முடித்தார்.

ரசிகர்கள் முழக்கம்

ரசிகர்கள் முழக்கம்

இதை பார்த்து கேப்டன் கோலி கையை தூக்கி காட்டி "என்னப்பா பண்ற?" என்பது போல செய்தார். ரிஷப் பண்ட் இந்த ஓவரில் தொடர்ந்து சொதப்பிய நிலையில், மொஹாலி ரசிகர்கள், "தோனி, தோனி" என முழக்கமிடத் துவங்கினர்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

நான்காவது போட்டியில் இந்தியா 358 ரன்கள் குவித்தும் தோல்வி அடையக் காரணம், பல பீல்டிங் சொதப்பல்கள், கேட்ச் வாய்ப்புகளில் கோட்டை விட்டது மற்றும், ரிஷப் பண்ட் தவற விட்ட மூன்று வாய்ப்புகள் ஆகியவை தான்.

தோனி இல்லை

தோனி இல்லை

ஒருவேளை நேற்று தோனி இருந்திருந்தால், பந்துவீச்சில் இந்தியா பல வாய்ப்புகளை வீணடித்திருக்காது. அதே போல, பந்துவீச்சில் குல்தீப், சாஹல் இருவருக்கும் தோனி எந்தளவு உதவி இருப்பார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

Story first published: Monday, March 11, 2019, 18:41 [IST]
Other articles published on Mar 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+