செம ஓபனிங்.. சச்சின் - சேவாக் ரெக்கார்டை அடிச்சு தூக்கிய ரோஹித் சர்மா - தவான் கூட்டணி!
Recommended Video

மொஹாலி : ரோஹித் சர்மா - தவான் இந்தியாவின் சிறந்த துவக்க வீரர்கள் என்ற இடத்தை நோக்கி விரைவாக முன்னேறி வருகிறார்கள்.
இந்தியா - ஆஸி. இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவரும் அருமையாக ஆடி கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். இவர்கள் இருவரும் இந்திய அளவில் அதிக ரன்கள் குவித்த கூட்டணிகள் பட்டியலில் முன்னேறியதுடன், மேலும் ஒரு சாதனை செய்துள்ளனர்.

இரண்டாம் இடம்
இந்த போட்டியில் இருவரும் கூட்டணியாக 12 ரன்கள் அடித்த போது, சச்சின் டெண்டுல்கர் - வீரேந்தர் சேவாக் கூட்டணியை முந்தி இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த கூட்டணிகளில் இரண்டாம் இடம் பிடித்தனர்.

முதல் இடம் யாருக்கு?
இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலி இணை 176 இன்னிங்க்ஸ்களில் 8227 ரன்கள் குவித்து இந்திய அளவில் கூட்டணியாக அதிக ரன்கள் சேர்த்தவர்களில் முதல் இடத்தில் உள்ளனர்.

ரோஹித் - தவான் ரன்கள்
தற்போது ரோஹித் - தவான் இணை 4500 ரன்களை கடந்து இவர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர். இவர்கள் 102 இன்னிங்க்ஸில் இந்த ரன்களை எட்டியுள்ளனர். ரோஹித் - தவான் கூட்டணியால் 8000+ ரன்களை எட்ட முடியுமா என்பது கேள்விக் குறி தான்.

அடுத்த இடங்களில் யார்?
ரோஹித் - தவான் இணையால் பின் தள்ளப்பட்டு சச்சின் - சேவாக் இணை 114 இன்னிங்க்ஸில், 4387 ரன்கள் சேர்த்து மூன்றாம் இடத்தில் உள்ளனர். நான்காவது இடத்தில் ராகுல் டிராவிட் - கங்குலி இணை 87 இன்னிங்க்ஸில் 4332 ரன்கள் குவித்துள்ளனர்.

பின்னே வரும் ரோஹித் - கோலி
இதில் சுவராஸ்யமாக ஐந்தாவது இடத்தில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை உள்ளது. இந்த இணை 72 இன்னிங்க்ஸ்களில் 4328 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் சர்மா - தவான் இணைந்து எடுத்த ரன்களை, இந்த இணை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

அடுத்த சாதனை
இந்த சாதனை ஒருபுறம் இருக்க, மற்றொரு சாதனைப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறி உள்ளது ரோஹித் சர்மா - தவான் இணை. அதிக 100+ கூட்டணி அமைத்தவர்கள் பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளனர்.

அதிக 100+ பட்டியல்
இந்த பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலி இணை முதல் இடத்தில் உள்ளது. இவர்கள் கூட்டணி 21 முறை 100+ ரன்களை கடந்துள்ளது. இரண்டாம் இடத்தில் கில்கிறிஸ்ட் - ஹெய்டன் இணை 16 முறை 100+ ரன்களை கடந்துள்ளது.

15 முறை 100+ ரன்கள்
மூன்றாம் இடத்தில் கிரீனிட்ஜ் - ஹெய்ன்ஸ் இணை 15 முறை, நான்காம் இடத்தில் ரோஹித் சர்மா - தவான் 15 முறை உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா - தவான் நான்காவது போட்டியில் சரிவில் இருந்து மீண்டு தங்கள் பேட்டிங் திறமையைக் காட்டினர்.


Click it and Unblock the Notifications