For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட விடுங்கப்பா.. வேர்ல்டு கப்-ல இப்படிலாம் தோற்க மாட்டோம்.. லாஜிக் இல்லாமல் உளறிய சஞ்சய்!

Recommended Video

உலகக்கோப்பையில் இப்படிலாம் தோற்க மாட்டோம்: உளறிய சஞ்சய்!- வீடியோ

மொஹாலி : முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் "லாஜிக்" இல்லாமல் ட்வீட் போடுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.

அந்த வகையில், இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும், உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறது என்பது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என அதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

மஞ்ச்ரேக்கர் பதிவு

"உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் அணியின் ஐந்தாவது பந்துவீச்சாளராக இருக்க மாட்டார்கள். அங்கே சுழற் பந்துவீச்சுக்கு பாதகமான பனித்துளி பற்றி கவலைப்பட வேண்டாம். அங்கே தோனி தான் விக்கெட் கீப்பிங் செய்வார்" என ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா தோல்வி அடைந்த காரணங்களை கூறி, அது உலகக்கோப்பையில் நடக்காது என கூறி இருக்கிறார்.

கவலைப்பட்டு தான் ஆகணும்

கவலைப்பட்டு தான் ஆகணும்

இந்த காரணங்களை மட்டும் கூறிய மஞ்ச்ரேக்கர், சரியான 11 வீரர்களை களமிறக்கினால் இந்தியா வென்று விடும் என்பது போல கூறி இருக்கிறார். அது சாத்தியமே அல்ல. நாம் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் இந்தியா என்ன செய்யப் போகிறது என கவலைப்பட்டு தான் ஆக வேண்டும். ஏன் தெரியுமா?

வேகப் பந்துவீச்சு எப்படி?

வேகப் பந்துவீச்சு எப்படி?

உலகின் நம்பர் 1 ஒருநாள் போட்டி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலிய தொடரில் இரண்டு போட்டிகளில் ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் கொடுத்துள்ளார். அடுத்த சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் ஷமி, புவனேஸ்வர் குமார் இருவரும் கடைசி ஓவர்களில் ரன்களை வாரி இறைத்துள்ளனர்.

சாஹல் - குல்தீப் நிலை

சாஹல் - குல்தீப் நிலை

அது போல, சுழற் பந்துவீச்சில் கில்லாடிகளாக அறியப்படும் சாஹல் - குல்தீப் யாதவ் கூட்டணியும் ரன்களை வாரி இறைத்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் தேவையான நேரங்களில் விக்கெட் எடுக்கத் தவறி உள்ளனர்.

இப்படி நடந்தால்...

இப்படி நடந்தால்...

துவக்க வீரர்கள் தவான் - ரோஹித் சர்மா மூன்று போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி விட்டு நான்காம் போட்டியில் தான் அதிரடியாக ரன் குவித்துள்ளனர். இதே போன்ற ஒரு நிலை உலகக்கோப்பையில் ஏற்பட்டால் கவலைப்படாமல் இருக்க முடியுமா?

நிறைய இருக்கு

நிறைய இருக்கு

இது போல இந்திய அணியின் நிலை குறித்து கவலைப்பட பல விஷயங்கள் உள்ளன. ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 2-3 பிரச்சனைகளை மட்டும் கூறி அதெல்லாம், உலகக்கோப்பை நடைபெறப் போகும் இங்கிலாந்தில் இருக்காது எனக் கூறி இருக்கிறார். அட போங்கப்பா!!

Story first published: Tuesday, March 12, 2019, 10:34 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
India vs Australia 4th ODI : Sanjay Manjrekar not worried about team India in World cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X