Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட் நியூஸ்.. IND vs AUS 4வது டி20 போட்டிக்கு அந்த சிக்கல் இல்லை.. வெளியான கோல்ட்கோஸ்ட் வானிலை

கோல்ட் கோஸ்ட்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் மூண்டு போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. எனவே, தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வாய்ப்பு கொண்ட நான்காவது டி20 போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தொடரின் முதல் போட்டி கான்பெராவில் மழையால் கைவிடப்பட்டது, ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர், நான்கு போட்டிகளாகச் சுருங்கியது. மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட்டில் நடந்த போட்டிகளில் வானிலை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், கராரா ஓவல் மைதானத்திலும் வானம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதே இந்திய அணியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

India vs Australia 4th T20I Rain Threat Low at Carrara Oval Full Weather Report

கோல்ட் கோஸ்ட் வானிலை அறிக்கை:

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக, அக்யூவெதர் (Accuweather) வானிலை அறிக்கையின்படி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும், போட்டி நடைபெறும் மாலை நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது வெப்பநிலை சுமார் 17 டிகிரி செல்சியஸ் ஆகக் குறையும் என்பதால், வீரர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மைதானம், புதிய சவால்:

கோல்ட் கோஸ்டில் உள்ள கராரா ஓவல் மைதானம், சர்வதேசப் போட்டிகளுக்கு மிகவும் புதியதாகும். இங்கு நடைபெறவுள்ள மூன்றாவது சர்வதேசப் போட்டி இதுவாகும். கடைசியாக 2022-ஆம் ஆண்டு இங்கு நடந்த டி20 போட்டியில், ஆரோன் ஃபின்ச்சின் பொறுமையான அரைசதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. எனவே, இந்த மைதானத்தின் தன்மை இரு அணிகளுக்கும் ஒரு புதிய சவாலாக இருக்கும். இங்கு நிதானமாக பேட்டிங் செய்ய வேண்டி வரலாம்.

கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சற்று தடுமாறிய நிலையில், வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான ஆட்டமே அணியைக் காப்பாற்றியது. எனவே, இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருந்து, தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும் என இந்திய வீரர்கள் நம்புகின்றனர்.

அணியில் மாற்றம்:

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தென்னாப்பிரிக்கா தொடருக்காக இந்தியா 'ஏ' அணியுடன் இணைந்துள்ளதால், இந்தப் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். காயத்திலிருந்து மீண்டுள்ள நிதிஷ் ரெட்டி, உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. தொடர் சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

Story first published: Thursday, November 6, 2025, 7:51 [IST]
Other articles published on Nov 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+