For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4வது டெஸ்ட் போட்டியில் இன்னும் 1 விக்கெட் வீழ்த்தினால் போதும்.. வரலாறு படைக்கப் போகும் பும்ரா

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் எந்த இந்திய பந்துவீச்சாளரும் செய்யாத அரிய சாதனை ஒன்றை செய்வார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகின் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் மைதானமான மெல்போர்னில் பும்ரா இதுவரை 15 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் மெல்போர்ன் மண்ணில் அவர் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் அந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்று அரிய சாதனையை செய்வார் பும்ரா.

இதற்கு முன்பு அனில் கும்ப்ளே மெல்போர்ன் மைதானத்தில் 15 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் அவரது சாதனையை பும்ரா முறியடிப்பார். அது மட்டுமின்றி, மெல்போர்ன் போட்டியில் பும்ரா ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினால் அந்த மைதானத்தில் 20 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆகவும் பும்ரா இருப்பார்.

அது மட்டும் இன்றி மூன்றாவது போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய பும்ரா, நான்காவது போட்டியில் 11 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் எந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வங்கதேச வீரரும் செய்யாத இமாலய சாதனையை செய்வார். அதாவது பார்டர் - கவாஸ்கர் எனும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், ஒரே தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்வார்.

ஹர்பஜன் சிங் 2000 - 01 ஆம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்கள் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக உள்ளது. அந்த சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு இன்னும் 11 விக்கெட்கள் மட்டுமே தேவை. அவர் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 21 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பார்டர் - கவாஸ்கர் ட்ராபி தொடர்களில், ஒரே தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய முதல் ஐந்து பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். அவரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பென் ஹில்பன்ஹாஸ் ஆவார். அவர் 2011 - 12 டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக 27 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையையும் முறியடித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்வார் பும்ரா.

Story first published: Saturday, December 21, 2024, 8:02 [IST]
Other articles published on Dec 21, 2024
English summary
India vs Australia 4th Test: Jasprit Bumrah could break multiple records at Melbourne
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+