Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி தேதி, நேரம் மற்றும் ஒளிபரப்பு விவரம்.. பாக்ஸிங் டே மேட்ச்

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாட உள்ள நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி எந்த தேதியில் துவங்கும், எந்த தேதியில் முடிவடையும், போட்டி துவங்கும் நேரம், முடிவடையும் நேரம் மற்றும் நேரலையில் எப்படி பார்ப்பது என்பன போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சம நிலையில் உள்ளன. இந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

டிசம்பர் 26 முதல் 30 வரை இந்த போட்டி நடைபெறும். டிசம்பர் 26 அன்று துவங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே போட்டி என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோத உள்ளன.

இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு துவங்கும். போட்டி நடைபெற உள்ள ஐந்து நாட்களிலும் அதிகாலை 5 மணிக்கு போட்டி துவங்கும். ஒவ்வொரு நாளும் மூன்று பகுதிகளாக போட்டி நடைபெறும்.

போட்டியின் முதல் பகுதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். 7 மணி முதல் 7.40 மணி வரை மதிய உணவு இடைவேளை அளிக்கப்படும். அந்த நாளின் இரண்டாவது பகுதி 7.40 மணி முதல் 9.40 மணி வரை நடைபெறும். பின்னர் 9.40 முதல் 10 மணி வரை தேநீர் இடைவேளை அளிக்கப்படும். பின்னர் அந்த நாளின் மூன்றாவது மற்றும் கடைசி பகுதி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கி 12 மணி வரை நடைபெறும்.

போட்டி சூழ்நிலையை பொறுத்து மூன்றாவது பகுதி ஆட்டம் சிறிது நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியை நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் பார்க்கலாம். மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற செயலி மற்றும் அதன் இணையதளத்தில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

Story first published: Monday, December 23, 2024, 9:26 [IST]
Other articles published on Dec 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+