மாபெரும் வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ்.. எந்த வீரரும் செய்யாத ரெக்கார்டு
மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அரைசதம் அடித்தார். அவர் 52 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் 76 வருட வரலாற்று சாதனை ஒன்றை உடைத்து இருக்கிறார்.
அது மட்டும் இன்றி இந்த போட்டியில் அவர் அதிக ஸ்கூப் ஷாட்களை ஆடினார். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார் சாம் கோன்ஸ்டாஸ்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சாம் கோன்ஸ்டாஸ் அறிமுக வீரராக களம் இறங்கினார். ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய அவர் பும்ராவின் பந்துகளை குறி வைத்து அடித்தார்.
பும்ராவின் பந்துவீச்சில் ரன் குவிக்க முடியாமல் மற்ற பேட்ஸ்மேன்கள் திணறி வரும் நிலையில், சாம் கோன்ஸ்டாஸ் பும்ரா வீசிய இரண்டு ஓவர்களில் 32 ரன்களை சேர்த்தார். அவர் அதிக ஸ்கூப் ஷாட்களை ஆடி விரைவாக ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் முதல் 10 ஓவர்களில் 23 ஸ்கூப் ஷாட்கள் மட்டுமே அடிக்கப்பட்டு உள்ளன. ஏனெனில், முதல் 10 ஓவர்களில் பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதால் பேட்ஸ்மேன்கள் அத்தனை எளிதில் ஸ்கூப் ஷாட்களை முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், சாம் கோன்ஸ்டாஸ் இந்த போட்டியின் முதல் 10 ஓவர்களில் 5 ஸ்கூப் ஷாட்களை ஆடினார்.
அதாவது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 23 ஸ்கூப் ஷாட்கள் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் மட்டும் சாம் கோன்ஸ்டாஸ் ஐந்து ஸ்கூப் ஷாட்களை ஆடி மிரட்டி இருக்கிறார். மேலும், 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன் மூலம் இளம் வயதில் அரை சதம் முடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
1948 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய நெய்ல் ஹார்வி அரை சதம் அடித்து இருந்தார். அவர் தனது 19 வது வயது 121 வது நாளில் அரை சதம் அடித்து இருந்தார். அந்த சாதனையை தற்போது சாம் கோன்ஸ்டாஸ் முறியடித்து இருக்கிறார்.
19 வயது 85 நாளில் சாம் கோன்ஸ்டாஸ் அரை சதம் அடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் இயான் கிரைக் 1953 இல் அரை சதம் அடித்ததே இதுவரை இளம் ஆஸ்திரேலிய வீரர் அடித்த டெஸ்ட் அரை சதமாக உள்ளது. அவர் 17 வயது 240 நாட்களில் அரை சதம் அடித்து இருந்தார். சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவரது அதிரடியால் ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன் சேர்த்தது.


Click it and Unblock the Notifications