Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4483 பந்தில் முதல் சிக்ஸ்.. பும்ரா கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான நாள் இதுதான்.. மிரள வைத்த சாம்

மெல்போர்ன்: பும்ராவுக்கு எதிராக எந்த கிரிக்கெட் வீரரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை செய்து இருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ். மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சாம் கோன்ஸ்டாஸ் பும்ரா ஓவர்களை குறி வைத்து பவுண்டரி அடித்தார்.

முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய மற்ற இந்திய பவுலர்களின் ஓவர்களில் கூட நிதானமாக ஆடிய சாம் கோன்ஸ்டாஸ் பும்ராவின் ஓவர்களில் பவுண்டரி அடித்தே தீருவேன் என உறுதியோடு ஆடினார். பும்ராவின் இரண்டு ஓவர்களில் மட்டும் 32 ரன்கள் சேர்த்தார். அதில் அவர் இரண்டு சிக்ஸ் அடித்தார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் பும்ராவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சிக்ஸ் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்தார் சாம் கோன்ஸ்டாஸ். டெஸ்ட் போட்டிகளில் பும்ரா வீசிய கடந்த 4,483 பந்துகளில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கப்படவில்லை. அந்த சாதனையை உடைத்த சாம் கோன்ஸ்டாஸ் பும்ராவின் ஓவர்களில் இரண்டு சிக்ஸ் அடித்தார்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் ஒரு ஸ்பெல்லில் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார் சாம் கோன்ஸ்டாஸ். உலகின் ஜாம்பவான் வீரர்களே பும்ராவுக்கு எதிராக ரன் குவிக்க முடியாமல் திணறி இருக்கின்றனர். இதற்கு முன் அதிகபட்சமாக பும்ராவுக்கு எதிராக ஒரே ஸ்பெல்லில் அதிக ரன் சேர்த்த வீரர் இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டர் குக் ஆவார்.

குக் 2018 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் பும்ராவுக்கு எதிராக ஒரே ஸ்பெல்லில் 40 பந்துகளை சந்தித்து 25 ரன்களை சேர்த்து இருந்தார். பும்ரா வீசிய ஆட்டத்தின் முதல் ஸ்பெல்லில் தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டூ பிளஸிஸ் 18 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்திருந்தார். அதுதான் பும்ராவின் அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் கோன்ஸ்டாஸ் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் பும்ரா வீசிய முதல் ஸ்பெல்லில் 33 பந்துகளை சந்தித்து 34 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இது மட்டுமின்றி 2018 இல் ஓவல் மைதானத்தில் ஜோஸ் பட்லர் பும்ராவுக்கு எதிராக இரண்டு சிக்ஸ் அடித்திருந்தார். அதற்கு பின் சுமார் 6 ஆண்டுகள் கழித்து சாம் கோன்ஸ்டாஸ் அந்த சாதனையை செய்து இருக்கிறார். பும்ரா ஓவர்களில் மட்டும் இரண்டு சிக்ஸ் அடித்தார் சாம் கோன்ஸ்டாஸ்.

இந்தப் போட்டியில் 52 பந்துகளில் அரை சதம் கடந்தார் சாம் கோன்ஸ்டாஸ். பின்னர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து இருந்தார்.

Story first published: Thursday, December 26, 2024, 7:15 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+