Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடரும் கனமழை: இந்தியா- ஆஸி. இடையேயான 5வது ஒருநாள் போட்டி ரத்து

கட்டாக்: ஒடிஷாவில் கனமழை தொடர்ந்து நீடிப்பதால் கட்டாக்கில் இன்று நடைபெற இருந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

7 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் இந்தியா வென்றது. 4-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Cuttack Pitch

5-வது ஒரு நாள் போட்டி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, October 26, 2013, 13:35 [IST]
Other articles published on Oct 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+