Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : 5வது போட்டியில் மோசமாக தோற்ற இந்தியா.. இந்திய மண்ணில் தொடரை வென்றது ஆஸி!

டெல்லி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி மூலம் ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது.

ஐந்தாவது போட்டியின் அணி மாற்றம், அணி விவரம் மற்றும் முழு போட்டி விவரம் கீழே -

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. சாஹல், ராகுல் நீக்கப்பட்டு, ஜடேஜா, ஷமி அணியில் இணைந்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், ஜேசன் பெஹ்ரண்டாப் நீக்கப்பட்டு, மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் லியோன் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி (கேப்டன்), கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி - ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மாக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி, ஆடம் சாம்பா, பாட் கம்மின்ஸ், நாதன் லியோன், ரிச்சர்ட்சன்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச், கவாஜா சிறப்பான துவக்கம் அளித்தனர். பின்ச் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து, கவாஜா சதம், ஹேண்ட்ஸ்கோம்ப் அரைசதம் அடித்து வெளியேறினர். அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு நன்றாகவே இருந்தது. ஷமி, குல்தீப் யாதவ் ரன்களை வாரி இறைத்தனர். மற்ற வீரர்கள் கட்டுகோப்பாக பந்து வீசினர். புவனேஸ்வர் 3, ஷமி 2, ஜடேஜா 2, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு

இந்திய அணி 273 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியது. தவான் 12, கோலி 20, ரிஷப் பண்ட் 16, விஜய் ஷங்கர் 16, ஜடேஜா 0 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். இந்தியா 132 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.

ஜாதவ், புவனேஸ்வர் கூட்டணி

ஜாதவ், புவனேஸ்வர் கூட்டணி

அந்த நிலையில், ஜாதவ், புவனேஸ்வர் குமார் இணைந்து 91 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். இவர்கள் இருவரும் ஓவருக்கு ஒரு சிக்ஸ் அல்லது ஃபோர் என திட்டமிட்டு ஆடினர். ஒரு கட்டத்தில், 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

எனினும், 46வது ஓவர் முடிவில் புவனேஸ்வர் குமார் 46 ரன்களுக்கும், 47வது ஓவரின் முதல் பந்தில் ஜாதவ் 44 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி கட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்கள் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸி. பந்துவீச்சு

ஆஸி. பந்துவீச்சு

பாட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். நாதன் லியோன் 1, ஆடம் சாம்பா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். பாட கம்மின்ஸ் 10 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

தொடரை இழந்த இந்தியா

தொடரை இழந்த இந்தியா

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 2-3 என சொந்த மண்ணில் இழந்துள்ளது இந்திய அணி. உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பெருத்த அடி வாங்கியுள்ளது. அதே சமயம், பலவீனமான அணி, இளம் வீரர்கள் மட்டுமே கொண்ட அணி என கூறப்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணி 0-2 என தொடரில் பின்தங்கி, பின்னர் மூன்று போட்டிகளை அடுத்தடுத்து வென்று அசத்தியுள்ளது.

Story first published: Wednesday, March 13, 2019, 21:43 [IST]
Other articles published on Mar 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+