Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS 5th T20 - சிஎஸ்கே வீரர், தமிழக வீரருக்கு இன்று வாய்ப்பு.. பிளேயிங் லெவனில் மாற்றம்

பெங்களூரு : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்த ஆட்டம் சமீபிரதாய போட்டியாக தான் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராக வேண்டி இருப்பதால் இந்த ஆட்டத்தில் நடப்பு தொடரில் வாய்ப்பைக் கிடைக்காத வீரர்களுக்கு அணியில் இடம் தரப்படும்.

India vs australia 5th t20 - 2 Changes might be happen in today playing xi

அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தற்போது காயம் காரணமாக விளையாடப்படாத நிலையில் அவருக்கு மாற்றான ஆல்ரவுண்டரை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு கடைசி டி20 யில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

சிவம் துபே பேட்டிங் நல்ல ஃபார்மில் இருக்கிறார். தற்போது தான் முழு உடல் தகுதியை எட்டி பந்து வீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் சிவம் துபேவில் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதே போன்று தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் அக்சர் பட்டேலுக்கு பதில் அணியில் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆர் சி பியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் பெங்களூருவில் களம் இறங்கிய அனுபவம் இருக்கிறது. இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு இன்றைய ஆட்டத்தில் இடம் கிடைக்கலாம் என தெரிகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது.

கடைசி போட்டியில் வெற்றி பெற்று நான்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை முடிக்க வேண்டும் என இந்தியாவும் கௌரவத்துடன் உலக சாம்பியன் ஆக நாடு திரும்ப வேண்டும் என ஆஸ்திரேலியாவும் நினைக்கும் என்பதால் கடைசி போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Sunday, December 3, 2023, 0:00 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+