Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலை வாரிய முன் வரிசை வீரர்கள்.. தனி ஆளாக போராடிய ஸ்ரேயாஸ்.. ஆஸி. பயன்படுத்திய சூப்பர் வியூகம்

பெங்களூரு : இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஜோடி ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினர். ஜெய்ஸ்வால் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 15 பந்துகளை எதிர் கொண்டு 21 ரன்கள் வெளியேறினார்.

India vs australia 5th t20 - India set 161 runs as target for australia


இதேபோன்று ருதுராஜ் 10 ரன்களில் வெளியேற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 5 ரன்களிலும், ரிங்கு சிங் ஆறு ரன்களிலும் ஆட்டம் இழந்தனராம் ஜித்தேஷ் சர்மா தன் பங்குக்கு 24 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 97 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இணைந்து அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவிலிந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டர்களும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் அக்சர் பட்டேல் 21 பந்துகளின் 31 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து 20 ஓவர் முடிவில் இந்திய அணி 160 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் ஜேசன் பெகுரண்டப் ,பென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தின் வேகத்தை குறைவாக வீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்தது. பந்து கொஞ்சம் பழையதாக மாறியதும் பேட்டிற்கு சரியாக வரவில்லை. முதலில் 161 ரன்கள் என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் எளிதானது என்பதால் அதனை அவர்கள் எளிதில் வென்று விடுவார்கள் என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

ஆனால் இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

Story first published: Sunday, December 3, 2023, 21:15 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+