Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அராஜகம்.. அக்சர் பட்டேலை நோக்கி எச்சில் தூப்பிய ஆஸி. வீரர்.. நடவடிக்கை எடுக்குமா ஐசிசி?

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்கள் என்பது கிரிக்கெட் பார்க்கும் சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். களத்தில் திமிராக நடந்து கொள்வது எதிரணி வீரர்களை தரக்குறைவாக நடத்துவது என்று ஆஸ்திரேலியா வீரர்கள் எப்போதும் வாலை ஆட்டிக் கொண்டு இருப்பார்கள்.

இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இழந்த நிலையில் ஆறுதல் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் போராடியது.

India vs australia 5th t20- jason beherndorff spit axar patel after getting out

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது அப்போது 97 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதனால் 140 ரன்களுக்குள் இந்தியாவை சுருட்டி விடலாம் என்று ஆஸ்திரேலியா வீரர்கள் நினைத்தனர். ஆனால் இறுதியில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 21 பந்துகளை எதிர் கொண்டு 31 ரன்கள் சேர்த்தார்.இதில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். இது ஆஸ்திரேலிய வீரர்களை கடுப்படைய செய்தது.

இந்த நிலையில் ஜேசன் பெகுரண்டப் வீசிய பந்தை அக்சர் பட்டேல் அடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அது எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. இதனை அடுத்து அக்சர் பட்டேல் நடந்து சென்ற பிறகு உடனே அவரை அவமதிக்கும் விதமாக ஜேசன் பெகுரண்டப் எச்சில் துப்பி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். இது மிகப்பெரிய அவமரியாதையாக பார்க்கப்படுகிறது.இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஜேசன் பெகுரண்டாப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற வீரர்களை ஐபிஎல் தொடரில் எடுக்காமல் ஒவ்வொரு அணிகளும் புறக்கணித்து அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதே ஒரு தவறை இந்திய வீரர் செய்தால் நடவடிக்கை எடுக்கும் ஐசிசி வெளிநாட்டு வீரர்கள் செய்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் என்றும் ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.

Story first published: Sunday, December 3, 2023, 22:18 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+