Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸ்திரேலியா 5வது டி20 எப்போது? மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? பிட்ச் மற்றும் வானிலை நிலவரம்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி இன்று பிரிஸ்பேனில் களமிறங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்தில் நடந்த நான்காவது போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற உத்வேகத்துடன், ஐந்தாவது போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

2026 டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக நடக்கும் இந்த தொடரின் வெற்றி மேலும் உத்வேகம் அளிக்கும் என்பதால், இந்திய அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தப் போட்டி எத்தனை மணிக்கு துவங்கும்? டாஸ் நேரம், மழை வாய்ப்பு, பிட்ச் அறிக்கை ஆகியவற்றை காணலாம்.

India vs Australia 5th T20I Brisbane Time Toss Weather - Rain prediction and Pitch report

போட்டி நேரம்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 5வது டி20 போட்டி, பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற உள்ளது.

தேதி : நவம்பர் 8, 2025, சனிக்கிழமை.
டாஸ் நேரம்: இந்திய நேரப்படி மதியம் 1:15 மணி.
போட்டி துவங்கும் நேரம்: இந்திய நேரப்படி மதியம் 1:45 மணி.

ஆடுகள அறிக்கை (Pitch Report)

பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானம், வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். ஆடுகளத்தின் பவுன்ஸ் தன்மையைப் பயன்படுத்தி அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதே நேரத்தில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இந்த ஆடுகளம் ஓரளவு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க முடியும். எனவே, பேட்டிங் - பவுலிங் இரண்டிற்கும் சரிசமமான வாய்ப்பு இருக்கும்.

பிரிஸ்பேன் வானிலை அறிக்கை (Weather Report)

இந்த போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளது. 'அக்யூவெதர்' (AccuWeather) வானிலை அறிக்கையின்படி, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்.

மாலை முழுவதும் 46 முதல் 51 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், போட்டி மழையால் பலமுறை தடைபடக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 20 டிகிரியாகவும் இருக்கும். வானம் மேகமூட்டத்துடன், அதிக ஈரப்பதத்துடன் காணப்படும்.

இரு அணிகளின் வீரர்கள் விவரம்

இந்தியா:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா.

ஆஸ்திரேலியா:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷூயிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மஹ்லி பியர்ட்மேன்.

Story first published: Saturday, November 8, 2025, 9:15 [IST]
Other articles published on Nov 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+