Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. இந்தியா தோல்வி அடைய காரணமே இது மட்டும்தான்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு ஏத்தினா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும், தோல்வி அடைய ஒரு முக்கிய காரணம் மட்டுமே இருந்தது. அது பற்றி பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை 2 - 2 என சமன் செய்யலாம் என்ற நிலை இருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா தனது மோசமான ஃபார்மை கருத்தில் கொண்டு இந்தப் போட்டியில் இருந்து விலகினார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match

பும்ரா தலைமையில் இந்திய அணி இந்தப் போட்டியில் பங்கேற்றது. சிட்னி மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இரு அணி வீரர்களும் ரன் குவிக்க திணறினர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. 162 ரன்கள் என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் இந்த இலக்கை வைத்தும் வெற்றி பெறலாம் என்றே முன்னாள் வீரர்கள் கூறினர். ஆனால், இந்திய அணிக்கு பெரிய சிக்கல் இருந்தது.

இந்திய அணியின் கேப்டனும், முதன்மை வேகப் பந்துவீச்சாளருமான பும்ராவுக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் அவரால் பந்து வீச முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் அவர் 10 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இருந்தார். இந்த நிலையில் பும்ரா இல்லாமல் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா முதல் 21 ஓவர்களை இடைவிடாமல் வீசினர்.

இவர்கள் இருவரும் அதிக ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை வங்கதேசம் வீழ்த்தினர். ஒருவேளை பும்ரா பந்து வீசி இருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக ரன் குவித்து இருக்க முடியாது. அவர்கள் அழுத்தத்தை உணர்ந்து இருப்பார்கள். பும்ரா இல்லாமல் 4 விக்கெட்கள் கிடைத்த நிலையில், அவர் இருந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆகவும் வாய்ப்பு இருந்திருக்கும்.

சிராஜ் மற்றும் பிரசித் முதல் 21 ஓவர்களை இடைவிடாமல் வீசியதால் விக்கெட்கள் கிடைத்தன. பும்ராவும் இருந்திருந்தால் இவர்கள் மூவரும் சுழற்சி முறையில் 40 ஓவர்கள் கூட வீசி இருக்கலாம். அதன் மூலம் ஆஸ்திரேலிய அணி கடும் அழுத்தத்தில் விக்கெட்களை இழந்திருக்கும்.

ஆனால், 21 ஓவர்களுக்கு பின் நிதிஷ் குமார், சுந்தர் ஆகியோர் பந்து வீசத் துவங்கிய உடன் ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 7 ரன்கள் என்ற ரன் ரேட்டில் சேர்த்து எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. பும்ரா என்ற தலைசிறந்த பந்துவீச்சாளர் இல்லாததால் இந்திய அணி இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Sunday, January 5, 2025, 9:26 [IST]
Other articles published on Jan 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+