For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா தோற்றதே அந்த நொடி தான்.. ரோகித் அந்த வீரரை ஓரங்கட்டிவிட்டார்..ஆகாஷ் சோப்ரா பரபர புகார்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் அதற்கான விமர்சனங்கள் மற்றும் ஏமாற்றங்கள் இன்னும் ஓய்ந்த பாடு இல்லை.

இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா தவறு செய்திருப்பதாகவும் முக்கிய வீரரை ஓரங்கட்டி விட்டதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். இந்த தொடரில் தொடக்க ஓவர்களை பும்ராவும், சிராஜும் தான் வீசி வந்தார்கள்.

India vs australia - Aakash chopra slams rohit sharma for giving over to siraj

ஆனால் இறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் தான் இந்தியா அடித்திருந்தது என்பதால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மா சமியை பயன்படுத்தினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, நாம் பந்து வீசும் போது முதலில் சரியாக தொடங்கினோம். ஆனால் பந்து நன்றாக ஸ்விங் ஆகி பந்து அங்கேயும் இங்கேயும் சென்றது. நாம் ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று கடுமையாக போராடினோம்.

இதற்கு காரணம் நாம் எதிர்பார்த்த இலக்கை எடுக்கவில்லை. எப்போதுமே சிராஜை வைத்து போட்டியை தொடங்கும் ரோகித் சர்மா இறுதி ஆட்டத்தில் முகமது சமியை பயன்படுத்தினார். இதற்கு காரணம் போதிய இலக்கு இல்லாததால் விக்கெட் வேண்டும் என்பதற்காக ரோஹித் இவ்வாறு செய்திருக்கலாம். இவ்வாறு செய்ததன் மூலம் சமி, ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் இது சிராஜுக்கு எதிர்மறையான எண்ணத்தையே கொடுத்திருக்கும்

கேப்டன் நம்மை ஓரங்கட்டு விட்டார் என்று நினைக்க வைத்திருக்கும். அதன் பிறகு அந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. முஹமது சிராஜை பொருத்தவரை இறுதி ஆட்டம் அப்போதே அவருக்கு முடிந்து விட்டது. ஏனென்றால் ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் சிராஜை ரோகித் சர்மாவால் பயன்படுத்தவே முடியவில்லை. சமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால் முதல் ஓவரில் 15 ரன்களும் இரண்டாவது ஓவரில் 13 ரன்களும் சென்றது. முதல் சில ஓவர்களில் அதிக ரன்கள் சென்றதும் இந்தியாவுக்கு பாதகமாக மாறியது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 22, 2023, 18:29 [IST]
Other articles published on Nov 22, 2023
English summary
India vs australia - Aakash chopra slams rohit sharma for giving over to siraj இந்தியா தோற்றதே அந்த நொடி தான்.. ரோகித் அந்த வீரரை ஓரங்கட்டிவிட்டார்..ஆகாஷ் சோப்ரா பரபர குற்றச்சாட்டு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+