Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வில் புதிய கிளஸ்டர்.. வேகமாக பரவும் கொரோனா.. மூடப்பட்ட எல்லைகள்.. சிக்கலில் இந்திய அணி!

சிட்னி : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் டெஸ்ட் தொடர் நடைபெற இருந்தது.

ஆனால், தற்போது இந்திய அணி தங்கி இருக்கும் அதே மாகாணத்தில் புதிய கிளஸ்டர் மூலம் கொரோனா வைரஸ் பரவல் துவங்கி உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி நடக்க உள்ள அடிலெய்டு மைதானமும் அதே பகுதியில் தான் இருக்கிறது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹோட்டலில் தங்கி இருக்கும் இந்திய அணியும் சிக்கலில் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கிலும் இன்னும் நீங்கவில்லை. பல நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. சில நாடுகளில் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது அந்த வைரஸ்.

பாதிப்பு எண்ணிக்கை

பாதிப்பு எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. தினசரி பாதிப்பு சில நாட்களில் இல்லை என்ற நிலை கூட ஏற்பட்டது. ஒற்றை இலக்கத்தில் தான் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில், திங்கள் அன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

17 பேருக்கு பாதிப்பு

17 பேருக்கு பாதிப்பு

ஞாயிறு அன்று 4 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்ட நிலையில், திங்கள் அன்று 17 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி நடக்க அடிலெய்டு நகரில் தான் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. அங்கே புதிய கிளஸ்டர் மூலம் பாதிப்பு பரவி வருவதாக கூறப்படுகிறது.

எப்படி பரவியது?

எப்படி பரவியது?

குவாரன்டைன் செய்யும் இடமாக மாறி உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரியும் ஊழியருக்கு பாதிப்பு இருந்துள்ளது. அவர் மூலமாக பெரிய குடும்பம் ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த நகரில் பலருக்கு பாதிப்பு பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எல்லைகள் மூடப்பட்டுள்ளது

எல்லைகள் மூடப்பட்டுள்ளது

இதை அடுத்து அடிலெய்டு நகர் இடம் பெற்று இருக்கும் தெற்கு ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் பிற இடங்களுக்கு சென்றவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய கேப்டன்

ஆஸ்திரேலிய கேப்டன்

தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து சென்ற அனைவரும் தனிமையில் உள்ளனர். சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஆடி விட்டு டாஸ்மானியா திரும்பிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், மேத்யூ வேட் மற்றும் அணியினர் தனிமையில் உள்ளனர்.

இந்திய அணி நிலை

இந்திய அணி நிலை

இந்த சூழ்நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் இருக்கும் சிட்னி நகரில் தான் இந்திய அணி வீரர்களும் தங்கி உள்ளனர். அவர்கள் தற்போது குவாரன்டைனில் உள்ளனர். அவர்கள் அதன் பின்னும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படலாம்.

போட்டி நடக்குமா?

போட்டி நடக்குமா?

அதே போல முதல் டெஸ்ட் போட்டி நடக்க உள்ள அடிலெய்டில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே முதல் டெஸ்ட் போட்டி நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு எப்படியும் தொடரை நடத்துவோம் என உறுதியாக உள்ளது.

கிரிக்கெட் தொடர்கள்

கிரிக்கெட் தொடர்கள்

முதல் டெஸ்ட் டிசம்பர் 17 அன்று துவங்க உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் நான்கு நகரங்களில் நடக்க உள்ளது. அதற்கு முன் இந்திய அணி நவம்பர் 27 முதல் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. டிசம்பர் 6 முதல் 8 வரை டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

Story first published: Monday, November 16, 2020, 13:17 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+