அஸ்வினுக்கு அப்புறம் பும்ரா மட்டுமே! டி20யில் அசத்தல் மைல்கல் சாதனை.. 2ஆம் இடத்தில் பும்ரா!
விசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
எனினும், இந்த போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, அஸ்வின் மட்டுமே எட்டிய ஒரு மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.

பும்ரா அசத்தல் பந்துவீச்சு
பும்ரா முதல் டி20யில் அருமையாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். எனினும், இந்தியா கடைசி ஓவர் சொதப்பலால் தோல்வி அடைந்தது.

50 விக்கெட்கள்
ஆஸி. முதல் டி20 போட்டியில் பும்ரா தன் 50வது டி20 போட்டி விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அளவில் டி20 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

அஸ்வின் முதல் இடம்
இதற்கு முன் அஸ்வின் 46 டி20 இன்னிங்க்ஸ்களில் 52 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தற்போது பும்ரா 41 இன்னிங்க்ஸ்களில் 51 விக்கெட் வீழ்த்தி அஸ்வினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

முதல் இடம் பிடிப்பார்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், பும்ரா அந்த போட்டியில் 2 விக்கெட்கள் வீழ்த்தும் நிலையில் அஸ்வினை முந்தி இந்திய அளவில் அதிக டி20 விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெறுவார்.

சாஹல் விக்கெட் வேட்டை
இந்திய அணிக்காக அதிக டி20 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின், பும்ராவுக்கு அடுத்து சாஹல் இருக்கிறார். அவர் 30 போட்டிகளில் 46 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications