Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் 2-1 வெற்றியை சரியாக கணித்த அனுபவ அனில் கும்ப்ளே.. உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்!!

Recommended Video

இந்தியாவின் வெற்றியை சரியாக கணித்த கும்ப்ளே- வீடியோ

சிட்னி : முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே இந்திய அணியின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றியை தொடருக்கு முன்பே சரியாக கணித்து இருந்த தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றியை கணிப்பது என்றால் எந்த அணி தொடரை வெல்லும் என்பதல்ல. சரியாக இரண்டு அணிகளும் எத்தனை போட்டிகளில் வெல்லும் என கணித்துள்ளார். மற்ற முன்னாள் வீரர்களும் கணித்தாலும், அவர்கள் கணிப்பு பலிக்கவில்லை.

கும்ப்ளேவின் கணிப்பு என்ன?

கும்ப்ளேவின் கணிப்பு என்ன?

ஆஸ்திரேலியாவில் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. தொடர் துவங்கும் முன் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களின் தொடர் வெற்றிக் கணிப்பை வெளியிட்டனர். அனில் கும்ப்ளே 2-1 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என தெளிவாக கூறி இருந்தார்.

அப்படியே நடந்தது

அப்படியே நடந்தது

அது இன்று அப்படியே நடந்துள்ளது. இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை முதன் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. அனில் கும்ப்ளே எப்படி முன்பே சரியாக கணித்தார்?

மழை நிச்சயம் வரும்

மழை நிச்சயம் வரும்

அனில் கும்ப்ளே இந்த கணிப்பை கூறிய சமயத்திலேயே மற்றொரு தகவலையும் கூறினார். இந்த தொடரில் மழை குறுக்கீடால் எப்படியும் ஒரு போட்டியாவது டிரா ஆகும். அதனாலேயே 2-1 என நான்கு போட்டிகள் டெஸ்ட் முடிவு இருக்கும் என கூறி இருந்தார்.

அனுபவம் வாய்ந்தவர் கும்ப்ளே

அனுபவம் வாய்ந்தவர் கும்ப்ளே

அதன்படியே நான்காவது போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி டிரா ஆனது. இந்தியா முதல் மற்றும் மூன்றாம் போட்டியிலும், ஆஸ்திரேலியா இரண்டாம் போட்டியிலும் வெற்றி பெற்றன. முன்னாள் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் அனில் கும்ப்ளே பெரும் அனுபவம் வாய்ந்தவர். அவரது கணிப்பு சரியாக அமைந்தது ஆச்சரியமே இல்லை.

பயிற்சியாளர் கும்ப்ளே?

பயிற்சியாளர் கும்ப்ளே?

ஆனால், இந்த சமயத்தில் அனில் கும்ப்ளே தான் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் என்பதும், ஆனால் அவருக்கு நடந்த மோசமான நிகழ்வுகளும் நம் கண் முன்னே வந்து போவதை தடுக்க முடியவில்லை.

Story first published: Tuesday, January 8, 2019, 18:21 [IST]
Other articles published on Jan 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+