இப்படியா பவுலிங் போடுவாங்க? ராக்கெட்டை எடுத்த அஸ்வின்.. சரமாரியாக அடித்த அந்த வீரர்!
சிட்னி : அஸ்வின் விசித்திரமாக பந்தை வீசி கேஎல் ராகுலுக்கு பயிற்சி கொடுக்கும் காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. அங்கே கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில் தான் அஸ்வின் - கேஎல் ராகுலின் வித்தியாசமான பயிற்சி வீடியோ வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்
2020 ஐபிஎல் தொடர் முடிந்த மறுநாளே இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா கிளம்பினர். ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க் உள்ளது. நவம்பர் 27 முதல் போட்டிகள் துவங்க உள்ளது.

புதுமைகள் செய்யும் அஸ்வின்
இதற்கான பயிற்சிகளில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். அஸ்வின் எப்போதுமே புதிதாக பந்துவீச முயற்சி செய்து பார்ப்பார். அதே போல, இந்த முறை டென்னிஸ் ராக்கெட்டை கையில் எடுத்துள்ளார். அதுவும் பந்து வீச..!

விளாசிய ராகுல்
அஸ்வின் டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை கேஎல் ராகுலை நோக்கி அடித்தார். ராகுல் அந்த பந்துகளை சரமாரியாக அடித்து பயிற்சி செய்தார். இது பார்க்க வேடிக்கையாக இருந்தது. பிசிசிஐ இந்த பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளது.

பவுன்ஸ் பயிற்சியா?
ஆஸ்திரேலியாவில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும் என்பதால் அதற்காக ராகுல் பயிற்சி செய்து இருக்கக் கூடும். அஸ்வின் பந்தை மேலே செல்லும் வகையில் டென்னிஸ் ராக்கெட் மூலம் அடித்து இருப்பார் என சிலர் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications