Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. டெஸ்டில் அஸ்வினுக்கு இடம் இல்லை.. குல்தீப் (அ) ஜடேஜா.. வாய்ப்பு கிடைக்கப் போவது யாருக்கு?

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்வின் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை என காரணம் கூறப்படுகிறது. இந்நிலையில் சிட்னி டெஸ்டில் சுழற் பந்துவீச்சில் யார் களம் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அஸ்வினுக்கு என்ன ஆச்சு?

அஸ்வினுக்கு என்ன ஆச்சு?

அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் அஸ்வின் 86 ஓவர்கள் வீசி 6 விக்கெட்கள் எடுத்தார். அந்த போட்டியின் போது அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

களமிறங்க வாய்ப்பில்லை

களமிறங்க வாய்ப்பில்லை

நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் அவரது உடற்தகுதியை சோதித்த போது அவர் இன்னும் டெஸ்டில் ஆடும் அளவிற்கு தகுதி பெறவில்லை என தெரிய வந்துள்ளது. எனினும், நான்காவது டெஸ்டுக்கான உத்தேச அணியில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அஸ்வின் நான்காவது டெஸ்டில் ஆடுவாரா இல்லையா என்பது டெஸ்டின் முதல் நாள் காலை முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அவர் களமிறங்குவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ்

ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ்

உத்தேச அணியில் அஸ்வின் தவிர்த்து சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் இருவரில் யார் அணியில் இடம் பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா மூன்றாவது டெஸ்ட்டில் ஆடினார். பேட்டிங்கில் கை கொடுக்கவில்லை என்றாலும் பந்துவீச்சில் அணிக்கு கை கொடுத்தார்.

குல்தீப் யாதவ் வாய்ப்பு

குல்தீப் யாதவ் வாய்ப்பு

குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இன்னும் வாய்ப்பு கிடைக்காமலேயே இருக்கிறார். குல்தீப் யாதவ் மட்டும் தனியாக அணியில் சுழற்பந்துவீச்சாளராக இடம் பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இருவருமே களமிறங்க வாய்ப்பு

இருவருமே களமிறங்க வாய்ப்பு

சிட்னி மைதானத்தில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறி வரும் நிலையில் ஜடேஜா - குல்தீப் யாதவ் இருவருமே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஒரு வேளை, டெஸ்டின் முதல் நாள் காலை அஸ்வின் களமிறங்க முழு தகுதியுடன் இருக்கிறார் என தெரிய வந்தால், அஸ்வின், ஜடேஜா இருவரும் அணியில் வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

உத்தேச அணி விவரம்

பிசிசிஐ அறிவித்துள்ள சிட்னி டெஸ்டுக்கான உத்தேச அணி - கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், மாயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

Story first published: Wednesday, January 2, 2019, 14:19 [IST]
Other articles published on Jan 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+