எனக்கு பயிற்சி தான் முக்கியம்.. புது வருஷ கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம்.. அஸ்வின் அதிரடி
சிட்னி : இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் தனியாக புத்தாண்டன்று பயிற்சி மேற்கொண்டார்.
மற்ற வீரர்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய நிலையில், அஸ்வின் காயத்தில் இருந்து மீண்டு தன் உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டார்.

அஸ்வின் காயம்
அஸ்வின் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே ஆடினார். முதல் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டதால், அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது.

ஜடேஜா மற்றும் அஸ்வின்
இந்த போட்டியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகிறார்கள். இந்தியாவில் ஜடேஜா மற்றும் அஸ்வின் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஓய்வு எடுக்காமல் பயிற்சி
அஸ்வின் தன் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். தன் உடற்தகுதியை சோதிக்கும் வகையிலும், நான்காவது டெஸ்ட்டுக்கு தயாராகும் வகையிலும் அவர் புத்தாண்டன்று ஓய்வு எடுக்காமல், பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி
ஆஸ்திரேலிய அணியில் சில வீரர்கள் புத்தாண்டன்று பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியில் அஸ்வின் தவிர்த்து எந்த வீரரும் பயிற்சியில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications