Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கல்யாண நாள் அதுவுமா அஸ்வின் கழுத்தை பிடித்த ப்ரீத்தி.. குவாரன்டைன் ரொமான்ஸ்.. எஸ்கேப் ஆகவே முடியாது!

சிட்னி : இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆட இருக்கிறார்.

அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் தன் மனைவியுடன் இந்திய அணிக்கான ஹோட்டல் அறையில் தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் அவரின் 9வது திருமண நாளை அங்கேயே கொண்டாடி உள்ளனர். அது பற்றி அஸ்வின் மனைவி ப்ரீத்தி ரொமான்டிக் ட்வீட் போட்டுள்ளார்.

ஐபிஎல்-இல் அஸ்வின்

ஐபிஎல்-இல் அஸ்வின்

2020 ஐபிஎல் தொடரில் அஸ்வின் பங்கேற்றார். இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆடினார் அவர். டெல்லி அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது டெல்லி.

மனைவியும் சேர்ந்தார்

மனைவியும் சேர்ந்தார்

அந்த தொடர் முடிந்த உடன் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா கிளம்பிய நிலையில், பலரும் தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றனர். அஸ்வின் தன் மனைவி ப்ரீத்தியை ஆஸ்திரேலியாவுக்கு உடன் அழைத்துச் சென்றார்.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் முடிந்த உடன் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்த தொடரில் தான் அஸ்வின் பங்கேற்க உள்ளார். டெஸ்ட் தொடர் துவங்கும் வரை அவர் பயிற்சியில் ஈடுபடுவார். தற்போது ஹோட்டல் அறையில் குவாரன்டைனில் இருக்கிறார்.

திருமண நாள்

திருமண நாள்

இந்த நிலையில், நவம்பர் 13 அன்று தன் 9வது திருமண நாளை மனைவி ப்ரீத்தியுடன் ஹோட்டல் அறையில் கொண்டாடினார் அஸ்வின். குவாரன்டைனில் இருப்பதால் வெளியே எங்கும் செல்ல முடியாது. இந்த நிலையில் தங்கள் திருமண நாளைப் பற்றி பதிவிட்டுள்ளார் ப்ரீத்தி.

கழுத்தை பிடித்தார்

கழுத்தை பிடித்தார்

அஸ்வின் கழுத்தை பிடித்து நெரிப்பது போல ப[புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அஸ்வின் வலியில் கத்துவது போலவும், ப்ரீத்தி கோபத்தில் இருப்பது போலவும் இருக்கும் அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

என்ன ட்வீட்?

என்ன ட்வீட்?

அந்த பதிவில் ப்ரீத்தி, எண்களின் 9 ஆண்டுகளுக்கு மகிழ்ச்சி. குவாரன்டைனில் ஒன்றாக இருந்து, தப்பிக்கவே முடியாததை விட வேறு என்ன அதிக ரொமான்டிக்காக இருந்து விட முடியும்?" என கூறி தங்களின் குவாரன்டைன் திருமண நாள் கொண்டாட்டம் பற்றி கூறி உள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

அஸ்வின் - ப்ரீத்தி திருமண நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஒருவர் வேடிக்கையாக அஸ்வின் கேரம் பால் போடும் போது பந்தை பிடிக்கும் ஸ்டைலில் அவர் கழுதை பிடியுங்கள் என்று கூறி உள்ளார். ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Story first published: Friday, November 13, 2020, 15:45 [IST]
Other articles published on Nov 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+